Onetamil News Logo

1-ம் வகுப்புமுதல் 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி ; முதலமைச்சர்  எடப்பாடி மு.பழனிசாமி உத்தரவு 

Onetamil News
 

1-ம் வகுப்புமுதல் 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி ; முதலமைச்சர்  எடப்பாடி மு.பழனிசாமி உத்தரவு 


சென்னை 2020 மார்ச் 25 ;தமிழ்நாடு அரசு கொரோனா வைரஸ் நோய்தொற்றை தடுக்க பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றது.  24.3.2020 மாலை 6.00 மணிமுதல், குற்றவியல் நடை முறைச் சட்டம் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்தது. அது தொடர்பான ஆய்வுக் கூட்டம் எனது தலைமையில் முகாம் அலுவலகத்தில் நடத்தப்பட்டது.  இக்கூட்டத்தில் தலைமைச் செயலாளர்  மு.சண்முகம்,  அவர்களும், காவல்துறை தலைமை இயக்குநர்  திரிபாதி, அவர்களும், சென்னை மாநகரக் காவல்ஆணையாளர்  ஏ.கே.விஸ்வநாதன், அவர்களும், பள்ளிக்கல்வித் துறைமுதன்மைச் செயலாளர்  தீரஜ்குமார், அவர்களும் பங்கேற்றனர்.  இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.
1. 24.3.2020 அன்று தமிழ்நாடு முழுவதும் +2 பொதுத்தேர்வு நடைபெற்றது.  அத் தேர்வில் சில மாணவர்கள், கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளால் தங்களால் தேர்வெழுதசெல்ல முடியவில்லை என்ற விவரத்தினை எனது கவனத்திற்கு கொண்டுவந்ததை கனிவோடு பரிசீலித்து, 24.3.2020 அன்று +2 தேர்வு எழுத முடியாதவர்களுக்கு மட்டும் வேறொருநாளில் தனியாகதேர்வு நடத்தவும்,இத்தேர்வுக்கான தேதியை பின்னர் அறிவிக்கவும்  உத்தரவிட்டேன்.
2. மேலும், கொரோனா நோயை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்துபள்ளிகள் இயங்காது என அறிவிக்கப்பட்டு இன்று வரை அமலில் உள்ளது.இதனால்,  தமிழ்நாட்டில் 1-ம் வகுப்புமுதல் 9-ம் வகுப்புவரை உள்ள மாணவர்களால் இறுதித் தேர்வு எழுதமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதை கருத்தில் கொண்டும்,மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டும், 1-ம் வகுப்புமுதல் 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க பள்ளிக் கல்வித்துறைக்கு உத்தரவிட்டேன்.
3. தேநீர் கடைகளில் தேவையற்ற கூட்டம் கூடுவதைத் தவிர்க்க, தமிழ்நாடு முழுவதும் உள்ள தேநீர் கடைகள் இயங்குவதற்கு, இன்று (25.3.2020) மாலை 6.00 மணி முதல் மறு அறிவிப்பு வரும் வரை தடை விதிக்கப்படுகிறது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo