Onetamil News Logo

தமிழ்நாட்டில் பத்திரிகையாளர் நலவாரியம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய குழு ;அமைச்சர் பேச்சு 

Onetamil News
 

தமிழ்நாட்டில் பத்திரிகையாளர் நலவாரியம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய குழு ;அமைச்சர் பேச்சு 


சென்னை ,2019 செப் 16 ;தமிழ்நாட்டில் பத்திரிகையாளர் நலவாரியம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய குழு அமைக்கப்பட்டுள்ளது -  செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ  தகவல்.தெரிவித்துள்ளார்.
நேற்று சென்னை, ஜி.ஆர்.டி. ஹோட்டலில் ஆல் மீடியா பிரஸ் கிளப் ஆஃப் தமிழ்நாடு-வின் 9-ஆவது ஆண்டு தொடக்க விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் கலந்துகொண்டு விருதுகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி  செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ  பேசியதாவது.
இந்த இனிய விழாவில் நான் கலந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன். தமிழ்நாட்டில் அனைத்து பத்திரிகையாளர்கள் நலன் பேணி காக்கப்பட்டு வருகிறது. பத்திரிகைத் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்று நலிவுற்ற நிலையிலுள்ள பத்திரிகையாளர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியமாக தற்போது 
ரூபாய் 10 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோன்று, பத்திரிகையாளர் குடும்ப ஓய்வூதியமாக ரூபாய் 5ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. பத்திரிகைத் துறையில் பல்வேறு நிலைகளில் பணியாற்றும்பொழுது அவர்கள் பணிபுரிகின்ற காலத்தில் இயற்கை எய்தும் நேரத்தில் அவர்கள் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் குடும்ப உதவி நிதி ரூபாய் 3 இலட்சமாக உயர்த்தி வழங்கப்படவுள்ளது.
பத்திரிகையாளர்கள் ஓய்வூதியப் பலனை முழுமையாக பெற வேண்டுமென்பதற்காகவும், அதிக எண்ணிக்கையில் பத்திரிகையாளர்கள் பயன்பெற வேண்டுமென்பதற்காகவும், 2018-ஆம் ஆண்டு முதல் பத்திரிகையாளர்கள் ஓய்வூதியம் பெறுவதற்கான பணிக்கொடையின் உச்சவரம்பு ரூபாய் 2 இலட்சத்திலிருந்து 
ரூபாய் 3 இலட்சமாகவும் பணிக்காலத்தில் பத்திரிகையாளர் பெற்று வந்த ஆண்டு வருமானத்திற்கான உச்சவரம்பு ரூபாய் 2 இலட்சத்திலிருந்து 
ரூபாய் 3 இலட்சமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், பத்திரிகையாளர்கள் பணிக் காலத்தில் கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளும் நேரத்தில் அவர்களுக்கு மருத்துவ நிதியுதவி வழங்கிட நிர்ணயிக்கப்பட்ட தொகை ரூபாய் 50 ஆயிரத்திலிருந்து ரூபாய் 1 இலட்சமாக உயர்த்தி வழங்கப்படவுள்ளது.
மேலும், செய்தியாளர்களுக்கு செய்தியாளர் அங்கீகார அட்டை, செய்தியாளர் அட்டை, செய்தியாளர்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயண அட்டை, மாவட்டங்களில் பணியாற்றும் செய்தியாளர்களுக்கு வீட்டுமனைப் பட்டா, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்புகளில் குறைந்த வாடகையில் வீடு ஒதுக்கீடு போன்ற எண்ணற்ற சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், டெல்லியில் பணிபுரியும் பத்திரிகையாளர்களுக்கும் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. 
இதுபோன்ற, எண்ணற்ற சலுகைகளும், பயன்களும் பத்திரிகையாளர்கள் பெற்றிருந்தாலும், பத்திரிகையாளர் நல வாரியம் அமைக்கப்பட வேண்டுமென தொடர்ந்து வரப்பெற்ற வேண்டுகோளின் அடிப்படையில் பத்திரிகையாளர் நல வாரியம் அமைப்பது தொடர்பான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க குழு அமைக்கப்படுமென 18.07.2019 அன்று செய்தித் துறை மானியக் கோரிக்கையின்போது சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப, தற்போது குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் பத்திரிகையாளர் நல வாரியம் அமைக்க அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo