Onetamil News Logo

2019 தமிழகத் தேர்தல் அதிமுக கூட்டணியின் தொகுதிப் பங்கீடு முடிந்து  தொகுதிகள் இறுதி செய்யப்பட்டுள்ளது அதிமுக-20 ; மீதியை கூட்டணிக்கு விட்டுக்கொடுத்துள்ளது.

Onetamil News
 

2019 தமிழகத் தேர்தல் அதிமுக கூட்டணியின் தொகுதிப் பங்கீடு முடிந்து  தொகுதிகள் இறுதி செய்யப்பட்டுள்ளது அதிமுக-20 ; மீதி கூட்டணி


சென்னை  2019 மார்ச் 14 ;நாடாளுமன்றத் தேர்தல் தேதி குறித்த அறிவிப்பை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரோ 9ம் தேதி அறிவித்தார். 17-வது மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என்றும், தமிழகத்தில் இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 18-ம் தேதி நடைபெறும் என்றும் கூறினார். அன்றைய தினமே காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல்கள் நடைபெறும் என்றார். 
                        
இதனையடுத்து, தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில்,  தமிழகத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசியவர், “தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்,  ஏப்ரல் 18-ம் தேதி நடைபெறும். தமிழகத்தில் காலியாக உள்ள 21 தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் நடத்தப்படும். வழக்கு நிலுவையில் இருப்பதால், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறாது” என்றார்.                                                                                                    
                                                                                                                                                            இந்த நிலையில் 2019 தமிழகத் தேர்தல் அதிமுக கூட்டணியின் தொகுதிப் பங்கீடு முடிந்து  தொகுதிகள் இறுதி செய்யப்பட்டுள்ளது.
அதிமுக-20 ; தென்சென்னை,  காஞ்சீபுரம் (தனி),  திருவண்ணாமலை (தனி),  சேலம், நாமக்கல்,  ஈரோடு, திருப்பூர்,  நீலகிரி (தனி),  பொள்ளாச்சி,  கிருஷ்ணகிரி,  திண்டுக்கல், கரூர்,  பெரம்பலூர், சிதம்பரம் (தனி),நாகப்பட்டினம் (தனி),  மயிலாடுதுறை, மதுரை,  தேனி,  திருவள்ளூர்(தனி),  திருநெல்வேலி,
பாமக-7  ; மத்திய சென்னை,  ஸ்ரீபெரும்புதூர்,  அரக்கோணம், தர்மபுரி,  ஆரணி,  விழுப்புரம் (தனி), கடலூர். பாஜக-5 ; கோயம்புத்தூர்,  சிவகங்கை,  ராமநாதபுரம்,  தூத்துக்குடி,  கன்னியாகுமரி,                                    
தேமுதிக-4  ; வடசென்னை,  கள்ளக்குறிச்சி,  திருச்சி, விருதுநகர்.என்.ஆர்.காங்கிரஸ் ; புதுச்சேரி.த.மா.கா.  தஞ்சாவூர் புதிய தமிழகம், தென்காசி, புதிய நீதிக்கட்சி ,வேலூர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo