Onetamil News Logo

மீன்வளப் பல்கலைக்கழகத்தில் 2019-2020 ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ;ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன 

Onetamil News
 

மீன்வளப் பல்கலைக்கழகத்தில் 2019-2020 ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ;ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன 


சென்னை  2019 ஜூலை 12 ; தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில்மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இம்மாதம் 14, 15 மற்றும் 16ம் தேதிகளில் நடத்தப்படுகிறது. இக்கலந்தாய்வில் பல்கலைக்கழகத்தின் இணைவேந்தர் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர்  ஜெயக்குமார்  வருகை தந்து இக்கலந்தாய்வை தொடங்கி வைத்து தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு அனுமதி கடிதத்தை வழங்க இருக்கிறார் என்று பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் சுக. பெலிக்ஸ் தெரிவித்தார்.
இப்பல்கலைக்கழகத்தின் இளநிலை மீன்வள அறிவியல் (பி.எப்.எஸ்சி) பட்டப்படிப்பிற்கு 14.07.2019 ஆம் தேதியும், இப்பல்கலைக்கழகத்தில் இளநிலை மீன்வளப் பொறியியல்,இளநிலை ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல், இள நிலை மீன்வள மாலுமிகலை தொழில்நுட்பவியல் , பட்டப்படிப்புகளுக்கு 15.07.2019 ஆம் தேதியும், மற்றும் இளநிலை உயிர் தொழில் நுட்பவியல் , இளநிலை உணவு தொழில்நுட்பவியல் ,மற்றும் இளநிலை வணிக நிர்வாகவியல் (மீன்வள வணிக மேலாண்மை),பட்டப்படிப்புகளுக்கு 16.07.2019 ஆம் தேதியும் சென்னை,வானியஞ்சாவடியில் உள்ள பல்கலைக்கழகத்தின் (சிறுசேரி, பழைய மகாபல்லிபுரம் சாலை) மீன்வள முதுநிலை பட்டப்படிப்பு நிலையத்தில் வைத்து, (Institute of Fisheries Postgraduate Studies, Siruseri, OMR, Vaniyanchavadi, Chennai) கலந்தாய்வு நடைபெறுகிறது.
மொத்தம்285 மாணவர்கள் இளநிலை மீன்வள அறிவியல் பட்டப்படிப்பிற்கும்,145 மாணவர்கள் இளநிலை மீன்வளப் பொறியியல் பட்டப்படிப்பிற்கும்,158 மாணவர்கள் இளநிலை உயிர் தொழில்நுட்பவியல் பட்டப்படிப்பிற்கும்,167மாணவர்கள் இளநிலை உணவு தொழில்நுட்பவியல்பாடப்பிரிவிற்கும்,104 மாணவர்கள் இளநிலை ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல் பாடப்பிரிவிற்கும்,104 மாணவர்கள் இளநிலை மீன்வள மாலுமிகலை தொழில்நுட்பவியல்பாடப்பிரிவிற்கும் மற்றும் 75 மாணவர்கள் இளநிலை வணிக நிர்வாகவியல் (மீன்வள வணிக மேலாண்மை) பாடப்பிரிவிற்கும்கலந்தாய்வியல் கலந்து கொள்ள அழைக்கப்பட்டுள்ளனர்.
மேற்கூறிய அனைத்து விபரங்களும் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் (www.tnjfu.ac.in) வெளியிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிரிவின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள கட்-ஆப் மதிப்பெண் மற்றும் அதற்கு மேல் மதிப்பெண்களைப் பெற்றவர்கள் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம். கலந்தாய்விற்கான அழைப்புக் கடிதத்தை பல்கலைக்கழக இணையதளத்தில் (www.tnjfu.ac.in)  பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கலந்தாய்விற்கான அழைப்புக் கடிதம் தபாலில் அனுப்பப்படவில்லை.ஆனால் தெரிவு செய்யப்பட்டவர்கள் கலந்தாய்வில் கலந்து கொள்ளுமாறு குறுஞ்செய்தி (SMS)  அவர்களது அலைபேசிக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் சுக. பெலிக்ஸ் , தெரிவித்தார். கலந்தாய்வு பற்றிய மேலும் தகவல்களுக்கு முனைவர் சீ.ஆ. சண்முகம், (9442601908), தலைவர், மாணவர் சேர்க்கைக்குழு  அவர்களை தொடர்பு கொள்ளலாம்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo