Onetamil News Logo

அரசு பணியில் வங்கிகள், உள்ளாட்சி அமைப்புகள், வாரியங்கள் சேர்க்கப்படவில்லை.  குரூப் 1 விண்ணப்பத்தில் வங்கி பணி என்றோ மற்ற அரசுத் துறை நிறுவனங்களில் பணி எனறே குறிப்பிட இடம் ஒதுக்கவில்லை.

Onetamil News
 

அரசு பணியில் வங்கிகள், உள்ளாட்சி அமைப்புகள், வாரியங்கள் சேர்க்கப்படவில்லை.  குரூப் 1 விண்ணப்பத்தில் வங்கி பணி என்றோ மற்ற அரசுத் துறை நிறுவனங்களில் பணி எனறே குறிப்பிட இடம் ஒதுக்கவில்லை.



சென்னை  2019 ஏப்ரல் 13 ; அரசியலமைப்பு சட்டத்தின்கீழ் உருவாக்கப்பட்டிருந்தாலும் ரிசர்வ் வங்கி பணி அரசுப் பணியாகாது என்று உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.  தமிழ்நாடு அரசுப் பணிகள் தேர்வாணையம் கடந்த 2016ல் குரூப்-1 தேர்வை நடத்தியது. 85 பணியிடங்களுக்கு நடந்த தேர்வில் 14,473 பேர் வெற்றிபெற்றனர். இவர்களுக்கான நேர்முகத்தேர்வு நடந்தது. இதில் மனோஜ்குமார் உள்ளிட்ட 5 பேருக்கு நேர்முக தேர்வுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை. இதையடுத்து, தங்களை நேர்முகத் தேர்வுக்கு அழைக்குமாறு டிஎன்பிஎஸ்சிக்கு உத்தரவிடக்கோரி 5 பேரும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.   அப்போது, டிஎன்பிஎஸ்சி சார்பில் ஆஜரான வக்கீல், மனுதாரர்கள் 5 பேர் தாங்கள் அரசுப் பணியில் இருப்பதை விண்ணப்பத்தில் தெரிவிக்கவில்லை என்று வாதிட்டார்.
 இந்த வாதத்தைக் கேட்ட நீதிபதி, டிஎன்பிஎஸ்சி விதிகளின்படி தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போது தாங்கள் அரசு மற்றும் அரசு நிறுவனங்களில் பணியாற்றுவதை விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும் எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து, மனோஜ்குமார் மேல்முறையீடு செய்தார். மனு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் அளித்த உத்தரவு வருமாறு:மனுதாரர் 2016ல் ரிசர்வ் வங்கியில் பணியில் சேர்ந்தார். அவர் குரூப் 1 தேர்வுக்கான விண்ணப்பத்தில் தான் அரசுப் பணியில் இல்லை என்று தெரிவித்துள்ளார். அரசு பணியில் வங்கிகள், உள்ளாட்சி அமைப்புகள், வாரியங்கள் சேர்க்கப்படவில்லை.  குரூப் 1 விண்ணப்பத்தில் வங்கி பணி என்றோ மற்ற அரசுத் துறை நிறுவனங்களில் பணி எனறே குறிப்பிட இடம் ஒதுக்கவில்லை. அதனால்தான் அரசுப் பணியில் இல்லை என்று மனுதாரர் தெரிவித்துள்ளார்.
 மனுதாரர் விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ளபடி தான் பணியாற்றும் ரிசர்வ் வங்கியிலிருந்து தடையில்லா சான்று வாங்கியுள்ளார். அதனால், அவர் தனது பணியை மறைத்து விண்ணப்பம் செய்துள்ளார் என்பதை ஏற்க முடியாது. அவர் அரசு ஊழியர் இல்லை என்று கூறியது சரிதான். தனி நீதிபதியின் உத்தரவால் மனுதாரர் தமிழ்நாடு காவல் துறையில் டிஎஸ்பியாக பணியில் சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அவருக்கு 1 வாரத்திற்குள் தமிழ்நாடு அரசுப் பணிகள் தேர்வாணையம் பணி வழங்க வேண்டும். தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo