Onetamil News Logo

உலக ரேபிஸ் தினம் ;ரேபிஸ் நோயினை முற்றிலும் தடுப்பதற்குமான முன்னெச்சரிக்கை 

Onetamil News
 

உலக ரேபிஸ் தினம் ;ரேபிஸ் நோயினை முற்றிலும் தடுப்பதற்குமான முன்னெச்சரிக்கை 


சென்னை  2019 அக்டோபர் 2 ;ரேபிஸ் நோயினை முற்றிலும் தடுப்பதற்குமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், நோயினால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றவும், ரேபிஸ் நோயினால் ஏற்படும் பாதிப்புகளை பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் செப்டம்பர் 28ம் தேதி உலக ரேபிஸ் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
ரேபிஸ் நோய்க்கான மருந்தினை 1885ம் ஆண்டு லூயிஸ் பாஸ்டர் கண்டுபிடித்தார். அவர் செப்டம்பர் 28ம் தேதி மறைந்தார். அவரை கவுரவிக்கவும் வகையில் 2007ம் ஆண்டு முதல் இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது. ரேபிஸ் நோயினால் உலகில் ஆண்டுதோறும் 55 ஆயிரம் உயிரிழக்கின்றனர். சராசரியாக 10 நிமிடத்திற்கு ஒருவர் உயிரிழப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
ரேபிஸ் எனும் வைரஸ் நரி, ஓநாய், வவ்வால் போன்ற விலங்குகளையும் வீட்டு விலங்கான நாய்களையும் பூனைகளையும் எளிதில் தாக்கக் கூடியது. ரேபிஸ் வைரஸ் தாக்கிய விலங்குகள் மனிதர்களைக் கடிப்பதாலோ அல்லது அவ்விலங்குகளால் கடிபட்ட பிற விலங்குகள் மூலமாகவோ ரேபிஸ் நோய் பரவும்.
மரணத்தை தேடி தரும் கொடிய வைரஸ் நோயான ரேபிஸை அதிகம் பரப்புவது நாய்களே. இந்நோயால் பாதிக்கப்பட்ட நாய், மனிதனை கடிப்பதால் மனிதன் பாதிப்புக்கு உள்ளாகிறான். இதன் விளைவாக தனி அறையில், தனிக்கூண்டில் மரணத்தை தழுவும் நிலை வரை செல்கிறது. நாய் கடித்தால் தான் ரேபிஸ் தொற்றும் என்பது இல்லை. பாதிக்கப்பட்ட நாயின் உமிழ்நீர் பட்டாலும், நகத்தால் பிராண்டினாலும் வரலாம். நம் உடலில் சிறுகீறல் இருந்து அதில் உமிழ்நீர் பட்டாலும் ரேபிஸ் வைரஸ் தாக்கும்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு தலைவலி, காய்ச்சல், பசியின்மை, வாந்தி, தண்ணீர் விழுங்க சிரமம் மற்றும் இரண்டாம் நிலையில் நரம்பு சம்பந்தப்பட்ட அறிகுறிகள், பக்கவாதம், உடல் உறுப்புகள் செயலிழப்பு போன்றவை ஏற்படும். ‘கோமா’ நிலைக்கு வந்து இறப்பு ஏற்படும்.
வெறிநாய்க் கடி பட்டவர் உடனடியாக அவ்விடத்தை சோப்புப் போட்டு சுத்தமான நீரால் கழுவி விட்டு மருத்துவச் சிகிச்சைக்குச் செல்ல வேண்டும். அரசு மருத்துவ மனைகளில் போதுமான அளவு வெறிநாய்க்கடி மருந்தை வைத்திருக்க வேண்டும். முன்பு போல் தொப்புளைச் சுற்றி தினமும் ஊசி போடும் முறை இப்போது இல்லை,
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo