Onetamil News Logo

நடிகர் ரஜினிகாந்த் நடித்த திரைப்படம் காலா,தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இன்று வெளியானது.  ரசிகர்கள் கேக் வெட்டி, பட்டாசு வெடித்து உற்சாகக் கொண்டாட்டம் 

Onetamil News
 

நடிகர் ரஜினிகாந்த் நடித்த திரைப்படம் காலா,தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இன்று வெளியானது.  ரசிகர்கள் கேக் வெட்டி, பட்டாசு வெடித்து உற்சாகக் கொண்டாட்டம் 


சென்னை 2018 ஜூன் 7 ; நடிகர் ரஜினிகாந்த் நடித்த திரைப்படம் காலா,தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இன்று வெளியானது.  ரசிகர்கள் கேக் வெட்டி, பட்டாசு வெடித்து உற்சாகக் கொண்டாடினார்கள். 
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா திரைப்படம் இன்று அதிகாலை தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் வெளியிடப்பட்டது.
தமிழகத்தில் 500க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் காலா திரைப்படம் வெளியாகியுள்ளது. அரசியல் வருகை குறித்து அறிவித்தப் பிறகு வரும் ரஜினியின் படம் என்பதால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னையில் பல்வேறு திரையரங்குகளில் அதிகாலை 4 மணிக்கு சிறப்பு காட்சிகள் தொடங்கின. நள்ளிரவு முதலே திருவிழா போன்று திரையரங்குகளின் முன் திரண்ட ரசிகர்கள், ரஜினி கட் அவுட்டுக்கு மேளதாளங்களுடன் பூஜைகள் செய்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பட்டாசு வெடித்தும் கேக் வெட்டியும் காலா திரைப்படத்தை வரவேற்றனர்.
கோவை, மதுரை, உள்ளிட்ட மாவட்டங்களிலும் சிறப்பு காட்சிகளுடன் காலா திரைப்படம் வெளியாகியது. இன்றுமுதல் ஞாயிற்றுக்கிழமை வரை திரையரங்குகளில் சிறப்பு காட்சி வெளியிடுவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
கர்நாடக மாநிலத்திலும் காலா திரைப்படம் 130 திரையரங்குகளில் காவல்துறை பாதுகாப்புடன் வெளியிடப்படுகிறது. ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களிலும், மும்பை உள்ளிட்ட வடமாநில நகரங்களிலும் காலா திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதேபோல், சிங்கபூர், மலேசியா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் காலா திரைப்படம் வெளியாகி இருக்கிறது
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo