Onetamil News Logo

ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற பழங்குடியின பெண் ஸ்ரீதன்யா கமல்ஹாசனை சந்தித்து வாழ்த்து ;10  ஐஏஎஸ் வெற்றியாளர்களும் சந்திப்பு

Onetamil News
 

ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற பழங்குடியின பெண் ஸ்ரீதன்யா கமல்ஹாசனை சந்தித்து வாழ்த்து ;10  ஐஏஎஸ் வெற்றியாளர்களும் சந்திப்பு 


சென்னை 2019 ஏப்ரல்  28 ; ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற கேரளாவின் பழங்குடியின பெண் ஸ்ரீதன்யா கமல்ஹாசனை சந்தித்து வாழ்த்து பெற்றார். 
ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற கேரளாவின் பழங்குடியின பெண் ஸ்ரீதன்யா தனக்கு பிடித்த கமல்ஹாசனை சந்திக்க விரும்புவதாக மீடியா வழியாக தெரிவித்திருந்தார். அவரின் விருப்பத்தை அறிந்த கமல்ஹாசன் அவரை சென்னைக்கு வரவழைத்து சந்தித்துப் பேசினார்.சென்னையில் கமல்ஹாசனை சந்தித்த  ஸ்ரீதன்யா அவரிடம் வாழ்த்து பெற்றார்.     ஸ்ரீதன்யாவுடன் ஐஏஎஸ் தேர்வில் வெற்றிபெற்ற மேலும் 10 பேர் கமல்ஹாசனை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
இந்த சந்திப்புக்கு பிறகு, கமல்ஹாசனை சந்தித்தது சிறந்த அனுபவமாக இருந்தது என்றும், அவர் ஒரு சிறந்த மனிதர் என்றும் ஸ்ரீதன்யா தெரிவித்துள்ளார். 
இந்த நிலையில், ஸ்ரீதன்யாவை சந்தித்த பிறகு கமல்ஹாசன் அளித்த பேட்டியில், ’ஸ்ரீதன்யா மிகப்பெரிய சாதனையாளர்; அதுதான் அவரின் முதல் தகுதி. ஸ்ரீதன்யாவின் வெற்றி கேரளா மற்றும் நாடு பெருமைப்பட வேண்டிய விஷயமாகும். அவருடைய இனத்தில், குலத்தில் உறவுக்காரர்கள் யாரும் செய்யாத விஷயத்தை ஸ்ரீதன்யா செய்துள்ளார்’ என்றும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo