Onetamil News Logo

சரவண பவன் ராஜகோபால் ;உச்சத்தை தொட்டார் ;ஒரே அடியில் மறைந்தார்  

Onetamil News
 

சரவண பவன் ராஜகோபால் ;உச்சத்தை தொட்டார்;ஒரே அடியில் மறைந்தார்  


சென்னை 2019  ஜூலை 18 ; தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம்  புன்னையடி எனும் சிறு கிராமத்தில் 1947-ம் ஆண்டு ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர் ராஜகோபால். அந்தக் கிராமத்துக்கு பஸ் வசதி கூட இல்லை. வறுமை காரணமாக ஏழாம் வகுப்பிலேயே படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வேலைக்குப் போனார். ஓர் உணவகத்தில் டேபிள் துடைக்கும் வேலையைச் செய்த அவர், இரவில் தரையிலேயே படுத்து உறங்கினார். இவர் 1981 ஆம் ஆண்டு டிசம்பர் 14 ஆம் தேதி சென்னை, கே.கே. நகர் பகுதியில் சரவணபவன் எனும் பெயரில் முதல் ஓட்டலைத் தொடங்கினார். படிப்படியாக முன்னேறி இன்று சென்னை, காஞ்சிபுரம், வேலூர் போன்ற மாவட்டங்களிலும், தலைநகர் டெல்லியிலும், ஐக்கிய அரபு நாடுகளிலும், மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, கனடா, பிரான்ஸ் உள்ளிட்ட வெளிநாடுகளிலும் கிளை பரப்பி பெரிய ஓட்டலாக விளங்குகிறது.                 
சிறிது நாளில் தேநீர் போட கற்றுக்கொண்டார். அதைத் தொடர்ந்து, ஒரு மளிகை கடையில் பணிபுரிந்தார். தன் தந்தை மற்றும் மைத்துனரின் உதவியுடன் சொந்தமாக ஒரு மளிகை கடையை ஆரம்பித்தார். தொழில் ரீதியில் இதுவே அவருக்கு முதல் முயற்சி என்பதால் நிறைய சவால்களை எதிர்கொண்டார். இளம் வயது என்பதால் ஒரு மளிகை கடையை நிர்வகிப்பது என்பது அப்போது பெரும் சவாலானதாக இருந்தது. நிறைய ஏற்ற இறக்கங்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. ஒரு வழியாக தனது தன்னம்பிக்கையால் சவால்களை எதிர்கொண்டு வெற்றிக்கொடி நாட்டத் தொடங்கினார்.
தன் மளிகைக் கடையில் 1979-ல் விற்பனையாளருடன் நடந்த மேற்கண்ட உரையாடலின் மூலம் உதித்த யோசனையை செயல்படுத்தியதன் விளைவாக 1981-ல் உதயமானது சரவண பவன். சுவையைக் காட்டிலும் பசி தீர்ப்பதே அத்தியாவசியம் என்ற போக்கு நிலவிய காலகட்டம் அது. தேவை அதிகம் என்பதால் தொழிலில் பேரெழுச்சி ஏற்பட்டது.
                                                                                                                                                                                              
உள்ளூரில் மட்டுமின்றி நாடு முழுவதிலும், வெளி நாடுகளிலும் சங்கிலித் தொடர் உணவகங்களைத் திறக்க வேண்டும். கே.கே.நகரில் வசிக்கும் ஒருவர் மதிய உணவு சாப்பிட டி.நகர் வரை செல்ல வேண்டியிருக்கிறதே என்ற தன்னிடம் அலுத்துக்கொண்டபோது இதைத்தான் செய்தார் பி.ராஜகோபால்.,ஒரு பரபரப்பு சினிமாவைப் போன்றது பி.ராஜகோபாலின் கதை. இதில் வெற்றிக்கான அம்சங்கள் நிறைய உள்ளன. விழுந்து வாறிய அடி முதல் சிகரம் தொட்ட எழுச்சி வரையில் தனிக்காட்டு ராஜாவாக குற்றம், உணர்வுபூர்வ முயற்சிகள், அதிகாரம் என பல அம்சங்களையும் உள்ளடக்கியவை.
இந்தியாவில் 33 கிளைகளுடன், வெளிநாடுகளில் 45-க்கும் மேற்பட்ட கிளைகளுடன் நிமிர்ந்து நிற்கிறது 'சரவண பவன்'. அவர் தனது சுயசரிதையில் சொல்கிறார், "என் இதயத்தில் வெற்றியை நிர்ணயித்தேன்."
வயிறு நிரம்பினால் போதும் என மக்கள் கருதி வந்த காலத்திலும் உணவின் தரத்திலும் வாடிக்கையாளர்களின் நல்ல அனுபவத்திலும் எந்தக் குறையும் வைக்கக் கூடாது என்பதில் முழு கவனம் செலுத்தினார் ராஜகோபால். மலிவு விலைப் பொருட்களை வாங்குவோம், ஊழியர்களுக்கு குறைந்த சம்பளம் கொடுப்போம் என்றெல்லாம் ஆலோசனை கூறிய அதிகாரியை வீட்டுக்கு அனுப்பினார். தரமானது சுவையானதுமான உணவை வழங்கியதால் ஆரம்ப காலத்தில் நஷ்டத்தையே சந்திக்க நேர்ந்தது. ஒவ்வொரு மாதமும் ரூ.10,000 அளவில் இழப்பு ஏற்பட்டது. ஆனால், உணவகம் மீதான மதிப்பு கூடக் கூட, அந்த இழப்புகள் எல்லாம் லாபங்களாக மாறத் தொடங்கின.
நல்ல தரமான உணவுகளை வழங்குவது மட்டுமின்றி, ஊழியர்களின் பணிச் சூழலை மேம்பட்டதாக வைத்திருப்பதே சரவண பவனின் வெற்றிக்கு முக்கியக் காரணம். சாப்பாடு தட்டின் மீது வாழை இலை வைக்கும் முறையை ராஜகோபால் பின்பற்றுவதற்குக் காரணம், வாடிக்கையாளர்களுக்கு மட்டுமின்றி, அந்தத் தட்டைக் கழுவும் ஊழியர்களுக்கு வேலை எளிதாகும் என்பதற்காகவே.
ஊழியர்களை மாதம்தோறும் தலைமுடியைத் திருத்தச் சொல்கிறார். இதனால், உணவு மீது முடி விழுவது தவிர்க்கப்படுவதுடன், ஊழியர்களும் நல்ல தோற்றத்தை வெளிப்படுத்த முடியும். அடுத்த நாள் வேலையில் சோர்வு ஏற்படும் என்பதால், இரவுக் காட்சி சினிமா பார்க்க யாருக்கும் அனுமதி இல்லை.
ஊழியர்களுக்கு முதலில் வேலை உறுதித்தன்மையை ராஜகோபால் தருகிறார். இருப்பிடத்தையும் நிர்வாகமே வழங்குகிறது. சரியான கால இடைவெளியில் ஊதிய உயர்வும் தரப்படுகிறது. தங்கள் குடும்பம் ஊரில் வசித்தால், அவர்களைப் பார்த்து வருவதற்கும் ஆண்டுதோறும் சிறப்பு விடுப்பு தரப்படுகிறது. ஒவ்வொரு ஊழியரின் முதல் இரண்டு குழந்தைகளுக்கான கல்விக்கும் ராஜகோபால் துணை நிற்கிறார். ஓர் ஊழியருக்கு உடம்பு சரியில்லை என்றால், அவரைப் பார்த்துக்கொள்ள நிர்வாகத்தில் இரண்டு பேரை நியமிக்கிறார். ஓர் ஊழியரின் குடும்பத்தை நல்லபடி பார்த்துக்கொள்ள வழிவகுத்துவிட்டாலே அந்த ஊழியர் மூலம் உற்பத்தி சிறப்பாக இருக்கும் என்பது அவரது நம்பிக்கை.
சாந்தாரம் கொலை வழக்கில் 2009-ல் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. தனது உதவி மேலாளரின் மகள் ஜீவஜோதியின் நெருங்கிய நண்பர்தான் சாந்தகுமார்  ஜீவஜோதியை மணக்க விரும்பினார் ராஜகோபால். ஆனால், சாந்தகுமார் மீது ஆர்வம் கொண்டிருந்தார் ஜீவஜோதி. பல எச்சரிக்கைகளுக்குப் பிறகும் அவர்கள் சந்தித்துக்கொள்வதை நிறுத்தாத நிலையில்,சாந்தகுமார் கடத்தப்பட்டு, சில நாட்களுக்குப் பிறகு மேற்குத் தொடர்ச்சி மலையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. பின்னர், ராஜகோபால் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.இப்படி உலக நாடுகளில் கிளை பரப்பியுள்ள சரவணபவன் ஓட்டல் உரிமையாளர் ராஜகோபாலின் வாழ்க்கையில், பிரின்ஸ் சாந்தகுமார் கொலை சம்பவம் ஒரு மோசமான பகுதி. தமிழக ஊடகங்களில் 18 ஆண்டுகளுக்கு முன்பு பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கு பரபரப்பாக பேசப்பட்டது. இதில், ராஜகோபால் குற்றம்சாட்டப்பட்டார்.               சரவணபவன் ஓட்டலில் ஜீவஜோதியின் தந்தை உதவி மேலாளராக பணிபுரிந்துவந்தார். சரவணபவன் ஓட்டல் உரிமையாளர் ராஜகோபாலுக்கும் ஜீவஜோதியின் குடும்பத்திற்கும் தொடர்பு ஏற்பட்டது. ஏற்கனவே இரண்டு மனைவிகளைக் கொண்ட ராஜகோபாலுக்கு தனது ஓட்டல் மேலாளர் மகள் ஜீவஜோதியின் மீது ஈர்ப்பு ஏற்பட்டது. அவரை மூன்றாம் தாரமாக திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆனால், ஜீவஜோதி பிரின்ஸ் சாந்தகுமார் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
ராஜகோபாலுக்கு ஜீவஜோதி மீது இருந்த ஆசையை மேலும் தூண்டும் விதமாக அவருடைய ஆசைக்கு ஜோதிடர்களும் தூபம் போட்டனர். அதனால், ராஜகோபால் பிரின்ஸ் சாந்தகுமாரை ஜீவஜோதியை விட்டு விலகும்படி மிரட்டினார். சென்னை வேளசேரியில் ஜீவஜோதியும் அவருடைய கணவர் பிரின்ஸ் சாந்தகுமாரும் வசித்துவந்த நிலையில், 2001 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி பிரின்ஸ் சாந்தகுமார் மாயமானார்.
2001 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதி தனது கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் காணவில்லை என்றும் சரவணபவன் ஓட்டல் உரிமையாளர் ராஜகோபால் தனது கணவரை கடத்தி சென்றிருக்கலாம் என்று ஜீவஜோதி வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரின்ஸ் சாந்தகுமாரை தேடி வந்தனர்.
இதையடுத்து, கொடைக்கானல் மலைப்பகுதியில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில் பிரின்ஸ் சாந்தகுமார் உடல் கண்டெடுக்கப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில், இந்த வழக்கில் தொடர்புடைய சரவணபவன் ஓட்டல் உரிமையாளர் ராஜகோபால், கொலைக்கு உடந்தையாக இருந்த டே‌னிய‌ல், கா‌‌ர்மேக‌ம், ஹூசை‌ன், கா‌சி ‌விஸ்வநாத‌ன், த‌மி‌ழ்செ‌ல்வ‌ன், முருகான‌ந்த‌ம், சேது, ப‌ட்டுர‌ங்க‌ம் உள்ளிட்ட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். இந்த கொலை வழக்கு விசாரணை பூந்தமல்லி நீதிமன்றத்தில் நடைபெற்றது.
ஜீவஜோதி மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை (அப்போது முதலமைச்சராக இருக்கவில்லை) சந்தித்து தனக்கு நேர்ந்ததை முறையிட்டார். அதற்கு ஜெயலலிதா ஆதரவு தெரிவித்தார் என ஜீவஜோதி கூறியுள்ளார்.
இந்த வழக்கில் 2004 ஆம் ஆண்டு பூந்தமல்லி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், குற்றம் நிரூபிக்கப்பட்டதால் ராஜகோபாலுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.55,00,000 அபராதமும் மற்ற 8 பேருக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. மேலும், ராஜகோபாலுக்கு ஆள் கடத்தல் வழக்கில் தனியாக 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் மற்றவர்கலுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கப்பட்டது.
தண்டனை பெற்ற அனைவரும் இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். தண்டனை காலத்தை குறைக்க வேண்டும் என முறையிட்டனர். ஆனால், இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் பி.கே.மிஸ்ரா, பானுமதி அமர்வு குற்றவாளிகளுக்கு கீழமை நீதிமன்றம் தண்டனை குறைவாக விதித்துள்ளதாகக் கூறி ராஜகோபால் உள்ளிட்ட 6 பேருக்கு ஆயுள் தண்டனையும் மற்ற 3 பேருக்கு கீழமை நீதிமன்றம் அளித்த தண்டனையை உறுதி செய்து திர்ப்பளித்தனர். இதையடுத்து, சில காலம் ராஜகோபால் சிறையிலிருந்தார்.
உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ராஜகோபால் உள்ளிட்ட அனைவரும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணையில், அரசு தரப்பு வழக்கறிஞர்கள் ஆதாரங்களை வலுவாக முன்வைத்தனர். இதையடுத்து, கடந்த மார்ச் மாதம் உச்ச நீதிமன்றம் ராஜகோபால் உள்ளிட்ட குற்றவாளிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அளித்த ஆயுள் தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தது.
இதனிடையே ஜீவஜோதி 2006 ஆம் ஆண்டு தனது நண்பர் தண்டாயுதபாணியை திருமணம் செய்துகொண்டார். தற்போது தஞ்சாவூரில் ஓட்டல் நடத்தி வரும் ஜீவஜோதி இந்த தீர்ப்பு மகிழ்ச்சி அளிப்பதாகவும் இறுதியில் நீதி வென்றுள்ளதாகவும் தெரிவித்தார்.
குற்றவாளிகள் சென்னையில் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். ஆனால், சரவணபவன் ஓட்டல் உரிமையாளர் ராஜகோபால், உடல் நலக்குறைவு காரணமாக சிறை தண்டனை அனுபவிக்க நீதிமன்றத்தில் சரணடைவதற்கு கால அவகாசம் கோரினார். ஆனால், நீதிமன்ற மறுத்துவிட்டது. இதையடுத்து, அவர் கடந்த 9 ஆம் தேதி நீதிமன்றத்தில் சரணைடைந்தார்.
ஆனால், தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதிக்க வேண்டும் என கோரினார். இதற்கு, நீதிபதிகள் தங்களால் ஒரு நாள்கூட சிறையில் இருக்க முடியாதா? என்று கேள்வி எழுப்பினர். இதையடுத்து, ராஜகோபால், சென்னை ஸ்டேன்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கே ராஜகோபாலுக்கு உயர் சிகிச்சை அளிப்பதற்கு தேவையான கருவிகள் இல்லாததால் தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க அனுமதி அளிக்க வேண்டும் என ராஜகோபாலின் மகன் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அனுமதி அளித்து உத்தரவிட்டனர்.
இதையடுத்து, ராஜகோபாலுக்கு நெஞ்சுவலியும் முச்சுத்திணறலும் ஏற்பட்டதால், வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சரவணபவன் ஓட்டல் உரிமையாளர் ராஜகோபால் சிகிச்சை பலனின்றி தனது 71வது வயதில் இன்று காலமானார்.

 

 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo