Onetamil News Logo

எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு-க்கு , நியூஸ் 7 தமிழ் சார்பில் தமிழ் ரத்னா விருது” வழங்கும் நிகழ்ச்சி

Onetamil News
 

எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு-க்கு , நியூஸ் 7 தமிழ் சார்பில் தமிழ் ரத்னா விருது” வழங்கும் நிகழ்ச்சி


                                                          
சென்னை 2019 அக்டோபர் 23 ;தமிழர்களின் திறமைகளை அங்கீகரிக்கும் வகையில், நியூஸ் 7 தமிழ் சார்பில் தமிழ் ரத்னா விருது” வழங்கும் நிகழ்ச்சி, சென்னை கலைவாணர் அரங்கில், கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கி நடைபெற்றது. 
நியூஸ் 7 தமிழ் நடத்திய தமிழ் ரத்னா நிகழ்ச்சியில் பங்கேற்று விருதுகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களை, நியூஸ் 7 தமிழின் நிர்வாக இயக்குனர் வி.சுப்பிரமணியன் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் வரவேற்றனர். 
பின்னர், மேடையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் ராஜூ, உடுமலை ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோருக்கு, நியூஸ் 7 தமிழ் நிர்வாக இயக்குனர் சுப்பிரமணியன்  பொன்னாடை அணிவித்தார்.
இதைத்தொடர்ந்து, விருது வழங்கும் விழாவில், கட்டைக்கூத்து .ராஜகோபாஆல் அவர்களுக்கு “கலை ரத்னா விருது”ம், புகழ்பெற்ற தமிழறிஞர் டாக்டர்.தொ.பரமசிவம் அவர்களுக்கு “இலக்கிய ரத்னா விருது”ம், பிரளயன் அவர்களுக்கு “நாடக ரத்னா விருது”ம் வழங்கி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  கவுரவித்தார். 
மேலும், "கேஸ்ட்லெஸ் கலக்டிவ்" குழுவினருக்கு “இசை ரத்னா விருதும்”, சதீஷ் சிவலிங்கம் அவர்களுக்கு “விளையாட்டு ரத்னா விருதும்”, ரவீந்திர குமார் அவர்களுக்கும் சேவை ரத்னா விருதும் வழங்கி கவுரவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, “ஆசிரியர் ரத்னா விருது” பகவான் அவர்களுகம், “தொழில் ரத்னா விருது” சிபி.செல்வம் அவர்களுக்கும், பிரபல பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் அவர்களுக்கு “மகளிர் ரத்னா விருதும்” வழங்கி முதல்வர் எடப்பாடிபழனிசாமி கவுரவித்தார்.
“யுவ ரத்னா விருது” விழியன் -க்கும், “சக்தி ரத்னா விருது” நளீனா பிரசீதா -க்கும் வழங்கப்பட்டது. “சிறப்பு விருது” அறிவிக்கப்பட்ட மறைந்த வசனகர்த்தா கிரேஸி மோகன்-க்கான விருதை அவரது சகோதரர் மாது பாலாஜி பெற்றுக்கொண்டார். 
“மற்றொரு சிறப்பு விருது”, புகழ்மிக்க எழுத்தாளரும், நெல்லை கவிநேசனின் நெருங்கிய எழுத்தாளமான, -முத்தாலங்குறிச்சி காமராசு-க்கு , “தமிழ் ரத்னா விருது”க்கு தேர்வு செய்யப்பட்ட எம்.எஸ்.சுவாமிநாதன் -க்கு, அவரது சார்பாக அவரது நிறுவனத்தை சேர்ந்த நிர்வாகியும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களிடம் இருந்து விருதை பெற்றுக் கொண்டார்கள். 
இதையடுத்து, விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி , - “அரசு திட்டங்களை செயல்படுத்த ஊடகங்கள் உந்துசக்தியாக உள்ளன. நியூஸ் 7 தமிழ் ஆண்டுதோறும் தமிழ் ரத்னா விருதுகள் வழங்குவது, சமூக அக்கறையை வெளிப்படுத்துகிறது. பசுமை புரட்சியின் நாயகன் எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களுக்கு, தமிழ் ரத்னா விருது வழங்கியது போற்றத்தக்கது. டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில், அரசுடன் பொதுமக்கள் ஒன்றிணைந்து செயல்பட்டால்தான், டெங்குவை ஒழிக்க முடியும். தமிழர்களின் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் அகழ்வாராய்ச்சிகளை மாணவர்கள் பார்வையிட, தமிழக அரசு ஏற்பாடு செய்யும்” என்று முதல்வர் திரு. எடப்பாடி பழனிசாமி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo