Onetamil News Logo

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2ம் ஆண்டு நினைவு நாள் 

Onetamil News
 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2ம் ஆண்டு நினைவு நாள்   


 சென்னை 2018 டிசம்பர் 05 ;  முன்னாள் முதல்வரும், அதிமுக பொது செயலாளருமான ஜெயலலிதாவின் 2ம் ஆண்டு நினைவு நாள் வருகிற 5ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு தமிழகம் முழுவதும்  அதிமுக சார்பில் அனுசரிக்கப்படுகிறது. சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள அண்ணா சிலையில் இருந்து அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் ஊர்வலமாக சென்று ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்த உள்ளனர். தொடர்ந்து நினைவிட வளாகத்தில் உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இந்நிலையில் ஜெயலலிதா 2ம் ஆண்டு நினைவு தினம் தொடர்பாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நேற்று மாலை கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர். இதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது, ஜெயலலிதா நினைவு தின பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்க ஏற்பாடுகளை செய்ய வேண்டும். ஜெயலலிதாவின் புகழை மக்களிடம் எடுத்துச்செல்ல வேண்டும். நினைவு தின கூட்டங்களை வெகுசிறப்பாக நடத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo