பாலியல் சீண்டலை எதிர்த்து புகார் கொடுப்பது எப்படி ?
பாலியில் வன்கொடுமை தொடர்பாக நாடகம் நடித்து காண்பித்தீர்கள். பாலியல் வன்கொடுமை சட்டம் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.இச்சட்டம் 2012யில் கொண்டு வரப்பட்டது.இது போக்ஸோ சட்டம் ஆகும்.
இச்சட்டத்தில் சிறார்களுக்கு எதிரான பாலியில் வன்கொடுமையில் ஈடுபட்டால் அதிகபட்சமாக ஆயுள் தண்டனை.18 வயதுக்குட்பட்டவர்கள் சிறார்களாக கருதப்படுவார்கள்.சிறார்களிடம் வாக்கு மூலம் பதிவு செய்ய பெண்காவல் அதிகாரிகளே இருப்பர் .குழந்தைகளின் வீடு அல்லது அவர்கள் விரும்பும் இடத்தில்தான் வாக்குமூலம் பெற வேண்டும்.இதற்கு பெண்கள் மட்டுமே விதிவிலக்கல்ல.ஆண் ,பெண் இருபாலினருக்கும் சட்டம் சமமானது.
பாதிக்கப்பட்டவர்கள் பிரச்சனையை புகார் கொடுக்கலாம்.இதில் பெரியவர்கள்,குழந்தைகள் யார்வேண்டுமானாலும் கொடுக்கலாம்.உடன் இருப்பவர்கள் பிரச்னை நடந்ததை சொல்லாமல் இருந்தாலும் தண்டனைக்குரிய விசயமாகும் .அதற்கும் ஆறு மாதம் அபாரதத்துடன் தண்டனை அளிக்கப்படும்.அதுவே குழந்தைகளாக இருந்தால் தண்டனை பொருந்தாது.
முதல் தகவல் அறிக்கை பெறுவது எப்படி?
காவல் நிலையம் சென்று சிறப்பு இளஞ்சிறார்கள் காவல் பிரிவில் புகார் கொடுப்பது என்றால் புகாரை எழுதிக் கொடுத்த உடன்,அவர்கள் படித்து காண்பித்து,அதை நன்கு தெரிந்து,புரிந்த பிறகு கையெழுத்திட்டு பதிவு செய்து அதற்கென்று எண் கொடுத்து FIR போட்டு அதில் நகல் எடுத்து நமக்கு ஒன்று தருவார்கள்.
இந்த தகவலை நீங்கள் வீட்டில்,அறிந்தவர்கள் எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டும்.பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன உரிமை கிடைக்கவேண்டுமோ அது கிடைக்கும்.உடல் ரீதியாக பாதிக்கப்பட்டாலும் அவர்களை கவனிக்க பதிவு செய்யக்கூடிய அளவில் அரசு மருத்துவர் மூலம் மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும்.
இலவச சட்ட உதவி பெறுவது எப்படி ?
குழந்தைகள் முதலில் எது நடந்தாலும் பெற்றோரிடம் தெரிவிக்க வேண்டும்.உடல் ரீதியாகவும்,மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டாலும் தகவல் தெரிவிக்கவும் குழந்தைகள் பாதுகாப்பு காப்பகம் உள்ளது.உடல் ரீதியகவும்,மன ரீதியாகவும் கவுன்சலிங் கொடுக்கப்பட்டு இழப்பீடு தொகையும் வழங்கப்படும்.இவை சார்பு நீதிமன்றத்தில் உள்ள அலுவலர் மூலம் சட்ட பணிகள் குழுவை தொடர்பு கொண்டு உதவிகளை பெறலாம்.மாணவர்களாகிய உங்களை யாராவது வீபரீதமாக தொட்டால் உடனே கத்தி எதிர்ப்பை தெரிவியுங்கள்.
பெற்றோர்களுக்கு வேண்டுகோள் :
பெற்றோரே பிள்ளைகள் சொல்வதை காது கொடுத்து கேளுங்கள் ;
பெற்றோர்கள் குழந்தைகளை அடக்கி வைக்க கூடாது.குழந்தைகளை பற்றி தெரிந்து வைத்து கொள்ள வேண்டும்.பள்ளி முடிந்து வந்த பிறகு ஒரு மணி நேரமாவது அவர்களுடன் பேச வேண்டும்.அவர்கள் சொல்வதை காது கொடுத்து கேட்க வேண்டும்.பிள்ளைகள் சொல்ல வருவதை பொதுவாக கேட்காமல் போவதால்தான் பல இடங்களில் சட்ட சிக்கல் வருகிறது. மாணவர்கள் பெற்றோர்களுக்கு தெரியாமல் யார் எந்த பொருள் கொடுத்தாலும் வாங்க கூடாது.யாராவது தொடாத இடத்தில் விபரீதமாக தொட்டால்,பேசினால் உடனே கண்களை விரித்து எதிர்ப்பை தெரிவியுங்கள் .அதனையும் மீறி தவறாக நடந்தால் சத்தமாக கத்துங்கள்.எதிர்ப்பை தெரிவியுங்கள்.குழந்தைகள் தைரியமாக வளர வேண்டும்.ஏன் ,எதற்கு என்று கேள்விகள் கேட்க வேண்டும்.கேள்வி கேட்டு பதில் பெற்றால்தான் வாழ்க்கையில் வெற்றிகரமாக வாழ்க்கை நடத்த இயலும்.
1098 என்கிற எண்ணை ஆபத்தான நேரத்தில் பயன்படுத்தினால் உங்களுக்கு அரசு சார்பாக இலவச சட்ட உதவி கிடைக்கும் .