Onetamil News Logo

அடுத்த 48 மணி நேரத்திற்கு தென் தமிழகம்,  ஒட்டிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை  பெய்கிறது 

Onetamil News
 

அடுத்த 48 மணி நேரத்திற்கு தென் தமிழகம்,ஒட்டிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை  பெய்கிறது 


சென்னை 2020 மே 31 ;அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது, நாளை முதல்  தென்மேற்கு பருவ காற்று தொடங்குகிறது;  என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
 தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு தென் தமிழகம், உள் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.தென்மேற்கு பருவமழை கேரளாவில் நாளை தொடங்குகிறது.
தென் கிழக்கு அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது நாளை தாழ்வு மண்டலமாகவும் அதனை தொடர்ந்து நாளை மறுநாள் விரைவாக புயலாகவும் வலுவடைந்து மேற்கு கடற்கரையை ஒட்டி வடக்கு திசையில் நகரும்.இதன் காரணமாக தென்கிழக்கு, தென் மேற்கு அரபிக்கடல் , லட்சதீவு மற்றும் கேரளா கடலோர பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு சூறாவளி காற்று மணிக்கு 45-55 கி.மீ வேகத்திலும் இடை இடையே மணிக்கு 65 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo