Onetamil News Logo

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்ற ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 5.88 லட்சம் பேர் விண்ணப்பம் 

Onetamil News
 

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்ற ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 5.88 லட்சம் பேர் விண்ணப்பம் 


சென்னை  2019 ஏப்ரல் 13 ;ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க இறுதி நாளான நேற்று வரை 5 லட்சத்து 88 ஆயிரம் பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்ற வேண்டும் என்றால் ஆசிரியர் தகுதித் தேர்வை எழுத வேண்டும் என்று கடந்த 2009ல் மத்திய அரசு உத்தரவிட்டது. இதன் பேரில்  தமிழகத்தில் கடந்த 2012ம் ஆண்டு முதல் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட வேண்டும் என்று விதி இருந்தும் நீதிமன்ற வழக்கு காரணமாக கடந்த சில  ஆண்டுகளாக தகுதித்  தேர்வு நடத்தப்படவில்லை. 
இந்நிலையில், இந்த ஆண்டுக்கான தகுதித் தேர்வு நடத்த கடந்த மாதம் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. இந்த தேர்வு மே மாதம் நடக்கும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தேதி குறிப்பிடவில்லை. ஆசிரியர்  தகுதித் தேர்வை பொறுத்தவரையில் இடைநிலை ஆசிரியர் பணிக்கு தாள் ஒன்றும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு தாள் 2 என தேர்வுகள் நடக்க உள்ளன. இந்த தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 4ம் தேதி வரை இறுதி நாளாக  அறிவிக்கப்பட்டது. இருப்பினும் பட்டதாரிகள் வைத்த கோரிக்கையை ஏற்று விண்ணப்பிக்க இறுதி நாள் ஏப்ரல் 12ம் தேதி என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தேதியை நீட்டித்தது. இறுதி நாளான நேற்று தாள் ஒன்றுக்கு 1 லட்சத்து 78  ஆயிரம் பேரும், தாள் 2க்கு 4 லட்சத்து 10 ஆயிரம் பேரும் விண்ணப்பித்துள்ளனர். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo