Onetamil News Logo

விஜயகாந்த் சுறுசுறுப்பாக இயங்குகிறாராம் ;அக்குபங்சர் நிபுணர் தீவிர சிகிக்சை வழங்கியதால் பயன் 

Onetamil News
 

விஜயகாந்த் சுறுசுறுப்பாக இயங்குகிறாராம் ;அக்குபங்சர் நிபுணர் தீவிர சிகிக்சை வழங்கியதால் பயன் 


சென்னை 2020 ஜூலை 3; தேசிய முற்போக்குத் திராவிட கழக தலைவர் கேப்டன் விஜயகாந்த் 2.0 - நடைப்பயிற்சி செய்கிறார், வேகமாக குணமாகிவருகிறார்!
தொடர்ந்து இருபது நாள்கள் சிகிச்சை எடுத்துக்கொண்டார் கேப்டன். அவரது ஆர்வத்தினாலும் ஒத்துழைப்பாலும் நல்ல பலன் கிடைத்துவருகிறது. தினமும் ஏழு மணி நேரம் ஆழ்ந்து உறங்குகிறார்
சென்னை, தி.நகரைச் சேர்ந்த அக்குபங்சர் நிபுணர். கடந்த சில வாரங்களாக விஜயகாந்த்துக்கு தீவிர சிகிச்சை அளித்துவருபவர்.
 சுவாசக்குழாயையும் உணவுக்குழாயையும் பிரித்து மூடும் தொண்டைப்பகுதியில் இருக்கும் வால்வு சரியாகச் செயல்படாததால் மூச்சு விடச் சிரமம் இருந்தது அவருக்கு. அதனால் தூக்கமின்றிச் சிரமப்பட்டார். விக்கல் வந்தால் பல நிமிடங்கள் நீடிக்கும். இப்போது அந்தப் பிரச்னைகளெல்லாம் தொலைந்துவிட்டன" என்றார் சங்கர்.
தொடர்ந்து இருபது நாள்கள் சிகிச்சை எடுத்துக்கொண்டார் கேப்டன். அவரது ஆர்வத்தினாலும் ஒத்துழைப்பாலும் நல்ல பலன் கிடைத்துவருகிறது. தினமும் ஏழு மணி நேரம் ஆழ்ந்து உறங்குகிறார். இப்படி அவர் நிம்மதியாகத் தூங்கி ஏழு வருடங்களாச்சு என்றார் பிரேமலதா மேடம்.
: அதுமட்டுமல்ல... பிறரது உதவியுடன் கைத்தாங்கலாக மட்டுமே நடக்கும் நிலையில் இருந்த விஜயகாந்த் இப்போது யாருடைய உதவியும் இல்லாமல் நன்றாக நடக்கிறாராம்.
"தினமும் ஒரு மணி நேரம் நடைப்பயிற்சி செய்கிறார் இப்போது. தூக்கம் சரியாக இல்லாததால் நரம்பு மண்டலத்தில் சிறிய பாதிப்பு இருந்தது. அதனால்தான் பேச்சிலும் தடுமாற்றம் இருந்தது. இதுவரை அவர் எடுத்துக் கொண்ட சிகிச்சைகளெல்லாம் அவர் உடலில் ஏற்பட்ட பாதிப்புகளுக்கான சிகிச்சைகளாகவே இருந்தன.
 ஆனால், இப்போது பிரச்னைகளின் மூல காரணம் தூக்கமின்மைதான் என்பதைக் கண்டறிந்து அதைக் குணப்படுத்தியதால் மிகவும் வேகமாக குணமாகிவருகிறார் விஜயராஜ் அண்ணன்" என்றார் சங்கர்.
ஆம், விஜயராஜ் அண்ணன் என்றே விஜயகாந்தைக் குறிப்பிடுகிறார் சங்கர். காரணம், விஜயகாந்த் படித்த தேவகோட்டை டிபிரிட்டோ பள்ளிக்கூடத்தில், அதே காலகட்டத்தில் படித்த ஜூனியர் இவர். இருவருமே ஹாஸ்டல்வாசிகள். இப்போது பள்ளியின் முன்னாள் மாணவர்கள் நடத்திவரும் வாட்ஸப் குழுவில் பழைய மாணவர் விஜயராஜ் ஆகவே சுறுசுறுப்பாக இயங்குகிறாராம் விஜயகாந்த்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo