Onetamil News Logo

தூத்துக்குடியில் உள்ள ஐ.ஏ.எஸ்  அகடாமியும் விசாரணை வலையத்திற்குள் ;குரூப் 2 ஏ தேர்வில் 5 அரசு ஊழியர்கள் கைது  37 அரசு ஊழியர்களுக்கு  வலைவீச்சு 

Onetamil News
 

தூத்துக்குடியில் உள்ள ஐ.ஏ.எஸ்  அகடாமியும் விசாரணை வலையத்திற்குள் ;குரூப் 2 ஏ தேர்வில் 5 அரசு ஊழியர்கள் கைது  37 அரசு ஊழியர்களுக்கு  வலைவீச்சு 


சென்னை 2020 ஜனவரி 3 ; குரூப் 2 ஏ தேர்வு முறைகேடு விவகாரத்தில் மேலும் 5 அரசு ஊழியர்கள் கைது: 37 பேருக்கு வலைவீச்சு சிபிசிஐடி தீவிர விசாரணை செய்துவருகிறார்கள்.
 குரூப் 2ஏ தேர்வை முறைகேடாக எழுதி தேர்ச்சி பெற்று அரசு பணியில் இருந்த 5அரசு ஊழியர்களை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். இதில் மோசடி மன்னன் ஜெயகுமாரின் கார் டிரைவரின் மனைவியும் ஒருவர். மற்றொருவர் தலைமை செயலக ஊழியர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ராமேஸ்வரம் மையத்தில் மோசடியாக தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று பணியில் தற்போது அதிகாரிகளாக வலம் வந்தவர்கள் கைதுக்கு பயந்து அலுவலகத்துக்கு விடுப்பு எடுத்து தலைமறைவாகிவிட்டனர். தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப் 4 தேர்வில் முறைகேடு நடந்தது. இதில் மாடு மேய்த்தவர் மாநில அளவில் முதலிடம் பிடித்தார். இதுவே டிஎன்பிஎஸ்சி தேர்வில் முறைகேடு நடந்து அம்பலமானதற்கு காரணமாக இருந்தது. இதில் பலர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். மோசடி மன்னன் ஜெயகுமார், போலீஸ் எஸ்ஐ சித்தாண்டி ஆகியோர் தலைமறைவாகிவிட்டனர்.
இந்நிலையில் 2017ம் ஆண்டு ஆகஸ்ட் 26ம் தேதி தமிழக அரசின் 41 துறைகளின் காலியாக உள்ள 1953 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 2ஏ தேர்வு நடந்தது. இத்தேர்வை 5.53 லட்சம் பட்டதாரிகள் எழுதினர். தொடர்ந்து 2018ம் ஆண்டு மார்ச்சில் தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. குரூப் 2ஏ தேர்வு என்பது நேர்முக தேர்வு அல்லாத பதவியாகும். அதாவது குரூப் 2 ஏ தேர்வுக்கு முதல் நிலை தேர்வில் வெற்றிபெற்றால் மட்டுமே போதும். அவ்வாறு தேர்வு பெற்றவர்களுக்கு உடனடியாக பதவிகள் வழங்கப்படும். இதனால் இத்தேர்வை போட்டி போட்டு கொண்டு அதிகளவில் தேர்வு எழுதுவது வழக்கம். இந்த நிலையில் தான் மெகா மோசடி நடந்துள்ளதாக தகவல் வெளியானது. அதாவது ஏற்கனவே குரூப் 4 தேர்வில் குற்றச்சாற்றுக்குள்ளான ராமேஸ்வரம் மையத்தில், குரூப் 2ஏ தேர்வு எழுதிய 37 பேர் முதல் 100 இடங்களுக்குள் வந்தனர்.
இதை தொடர்ந்து டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் கொடுத்த புகாரின் படி சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில் தலைமறைவாக உள்ள மோசடி மன்னன் ஜெயகுமார் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் கைது நடவடிக்கையில் சிபிசிஐடி போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், நேற்று முன்தினம் உதவி ஆய்வாளர் சித்தாண்டி சகோதரன் வேல்முருகன், மற்றும் சித்தாண்டி நண்பர் காவலர் முத்துவின் மனைவி ஜெயராணி ஆகியோரை கைது செய்தனர். மேலும், ராமேஸ்வரம் தேர்வு மையத்தில் மோசடியாக வெற்றி பெற்ற முக்கிய குற்றவாளியான ஜெயகுமார் கார் டிரைவரான கொரட்டூரை சேர்ந்த சம்பத் மனைவி சுதாதேவி வெற்றி பெற்று தற்போது திருவண்ணாமாலை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் உதவியாளராகவும், அதேபோல், சென்னை தலைமை செயலகத்தில் உள்துறையில் உதவியாளராகவும் பணியாற்றி வந்த திருவிக நகரை சேர்ந்த விக்னேஷ்,  தூத்துக்குடியை சேர்ந்த அரசு ஊழியரான சுதா என்பவரையும் சிபிசிஐடி போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர்.
இதுதவிர காஞ்சிபுரத்தை சேர்ந்த அரசு ஊழியரான திருஞானசம்மந்தம் என்பவரை போலீசார் பிடித்து சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் வைத்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். இருவரும் தேர்வு எழுதியதோடு மட்டும் இல்லாமல் இடைத்தரகர்களாகவும் செயல்பட்டுள்ளனர். இதனால் அவர்கள் மூலம் யார் யார் எவ்வளவு பணம் கொடுத்து குரூப் 2 தேர்வில் முறைகேடாக வெற்றி பெற்றனர் என்பது குறித்து தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் குரூப் 2ஏ தேர்வு முறைகேடு குறித்து சிபிசிஐடி போலீசார் கடந்த 31ம் தேதி வழக்கு பதிவு செய்த உடனேயே ராமேஸ்வரம் தேர்வு மையத்தில் வெற்றி பெற்ற 37 பேரும் அவசர விடுப்பில் தலைமறைவாகினர்.
ஆனால் சிபிசிஐடி போலீசாரின் தீவிர நடவடிக்கையால் மோசடியாக தேர்வு எழுதி வெற்றி பெற்ற 2 பெண்கள் உட்பட 5 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். ஒருவர் விசாரணையில் உள்ளார். இந்த வழக்கில் அவசர விடுப்பில் தலைமறைவாக உள்ள மீதமுள்ள 35 அரசு ஊழியர்களையும் கைது செய்ய சிபிசிஐடி போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் பணியில் இருந்தபோது பெற்ற சம்பளம், அரசு கோப்புகளில் போட்ட கையெழுத்து மற்றும் உத்தரவுகள் நிலை கேள்விக்குறியாகி உள்ளது. இவர்கள் தகுதி நீக்கும் பட்சத்தில் இவர்கள் போட்ட அனைத்து உத்தரவுகளும் தானாகவே ரத்தாகிவிடும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு அரசு மாற்று ஏற்பாடு செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
குரூப் 2ஏ தேர்வு எழுதிய 37 பேர் முதல் 100 இடங்களுக்குள் வந்தனர்.மோசடி மன்னன் ஜெயகுமார், போலீஸ் எஸ்ஐ சித்தாண்டி தலைமறைவாக உள்ளனர். தலைமை செயலக ஊழியர் உட்பட 3 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.மேலும் இதுகுறித்து  தமிழகத்தில் உள்ள அணைத்து ஐ.ஏ.எஸ்  அகடாமியும்,மட்டுமல்லாமல் குறிப்பாக தூத்துக்குடியில் உள்ள ஐ.ஏ.எஸ்  அகடாமியும் விசாரணை வலையத்திற்குள்  வந்துள்ளதாக  சிபிசிஐடி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo