Onetamil News Logo

ரேஷன் கார்டுகளுக்கு, 1,000 ரூபாய் நிவாரண உதவியும், அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், சர்க்கரை ஆகியவை இலவசமாகவும் வழங்க வீடு வீடாக, 'டோக்கன்' வழங்க, வருவாய்த்துறை முடிவு 

Onetamil News
 

ரேஷன் கார்டுகளுக்கு, 1,000 ரூபாய் நிவாரண உதவியும், அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், சர்க்கரை ஆகியவை இலவசமாகவும் வழங்க வீடு வீடாக, 'டோக்கன்' வழங்க, வருவாய்த்துறை முடிவு 


சென்னை 2020 மார்ச் 29 ;  கொரோனா வைரஸ் தடுப்புக்கான ஊரடங்கு உத்தரவை தமிழக அரசு,அறிவிக்கும் முன்பாக, நிவாரணம் பெறுவதற்காக, ரேஷன் கடையில் மக்கள் கூட்டத்தை தவிர்க்கும் பொருட்டு  தடுக்கும் வகையில், வீடு வீடாக, 'டோக்கன்' வழங்க, வருவாய்த்துறை திட்டமிட்டுள்ளது.
தமிழக அரசு, கொரோனா வைரஸ் தடுப்புக்கான ஊரடங்கு உத்தரவை அறிவிக்கும் முன்பாக, நிவாரணம் வழங்குவது குறித்து அறிவித்தது. அனைத்து வகை அரிசி பெறும் ரேஷன் கார்டுகளுக்கு, 1,000 ரூபாய் நிவாரண உதவியும், அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், சர்க்கரை ஆகியவை இலவசமாகவும் வழங்கப்படும் என, முதல்வர் அறிவித்திருந்தார்.வரும் ஏப்., 2 ம் தேதி துவங்கி, 15ம் தேதி வரை, தொடர்ச்சியாக நிவாரணம் வழங்கி முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ரேஷன் கடையில் மக்கள் கூட்டமாக சேர்வதை தடுக்கவும், நிவாரணம் வினியோகத்தை, நேரம் வாரியாக பிரித்து வெளியிடவும் திட்டமிடப்பட்டுள்ளது.பொதுமக்கள் கூட்டத்தில் அலைமோதுவதை தவிர்க்கும் வகையில், வீடு வீடாக சென்று, 'டோக்கன்' வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo