Onetamil News Logo

உலக புத்தகதினம்  ;யுனேஸ்கோ 1995ல் ஏப்ரல் 23ம் தேதி கொண்டாட அனுமதி 

Onetamil News
 

உலக புத்தகதினம்  ;யுனேஸ்கோ 1995ல் ஏப்ரல் 23ம் தேதி கொண்டாட அனுமதி 



சென்னை 2019 ஏப்ரல் 23 ; யுனேஸ்கோ 1995ல் உலக புத்தகதினம் அறிவிப்பை வெளியிட்டது. அன்றுமுதல் உலகெங்கும் இத்தினம் ஏப்ரல் 23ம் தேதி கொண்டாடப்படுகிறது.                                                                                                            
 வெற்றி பெற்ற பலரது வாழ்விலும் புத்தகங்கள் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன. வாசிக்கும் பழக்கம் ஒவ்வொருவருள்ளும் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்துகிறது. கற்பனைத்திறனை மேம்படுத்துவது மட்டுமன்றி பல்வேறு துறை ரீதியான விஷயங்களையும் அப்டேட் செய்து கொள்ளவும் புத்தகங்கள் பயன்படுகின்றன. அனைத்தையும் தேடிச் சென்று கற்க முடியாது. ஆனால் புத்தகங்கள் மூலம் வீட்டில் இருந்த படியே பல்வேறு துறைகளிலும் நிபுணத்துவம் பெற்று விட முடியும். புத்தகவாசிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து ஏப்.23ம் தேதி உலக புத்தக தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலகின் 100நாடுகளில் இத்தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 
ஐரோப்பாவில் வாழ்ந்த தலைசிறந்த இலக்கியவாதியும், நாடகமேதையுமான வில்லியம் ஷேக்ஸ்பியர் இந்தநாள்தான் இது. அவர் இலக்கியம், நாடகத்துறைக்கு ஆற்றிய பணியை சிறப்பிக்கும்வகையில் அவரது இறந்தநாளிலேயே உலகபுத்தகதினம் கொண்டாடப்பட்டு வருகிறது. யுனேஸ்கோ 1995ல் இதற்கான அறிவிப்பை வெளியிட்டது. அன்றுமுதல் உலகெங்கும் இத்தினம் கொண்டாடப்படுகிறது. அனைவருக்கும் வாசிக்கும்உரிமை, நூலகஉரிமை, உலகில் உள்ள அனைத்து அறிவுச்செல்வங்களையும் பாதுகாக்கும் நோக்கில் இதற்கான திட்டங்கள் பல செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அன்றைய தினம் பல்வேறு பதிப்பகங்களும் தங்கள் புத்தகங்களை தள்ளுபடியில் விற்பனை செய்து வாசககர்களை உற்சாகப்படுத்தி வருகின்றன.
1. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது நமக்கு அதுவரை தெரியாத விடயங்கள் நமக்குத் தெரியவரும். 
2. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது நம்முடைய பொதுப்புத்தியில் அதுவரை தெரிந்த தகவல்கள், உண்மைகள், விழுமியங்கள், எல்லாவற்றைப் பற்றியும் கேள்விகள் உருவாகும்.
3. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது நமது அறிவுப்பரப்பு ஒரு மில்லிமீட்டராவது விசாலமாகும்.
4. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது நம்முடைய உணர்வுகள் கூர்மையடையும்.
5. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது நாம்  அதுவரை நம்பியிருந்த உண்மைகள் பொய்களாக மாறும்.
6. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது நம்முடைய வீடு, ஊர், மாவட்டம், மாநிலம், நாடு, இனம், மதம், சாதி, மொழி, இவையாவும் மறைந்து போகும். பிரபஞ்ச மனிதனாக உணரமுடியும்.
7. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது உலகின் எந்த மொழிபேசும் மனிதர்களின் வாழ்வை, அவர்களுடைய பண்பாட்டை, பழக்கவழக்கங்களை, அந்த மொழி தெரியாமலேயே புரிந்துகொள்ள முடியும்
8. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது நம்முடைய மூடநம்பிக்கைகள் ஒழிந்து அறிவியல்பார்வை உருவாகும்.
9. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது சனாதனத்துக்கும் மரபுக்கும் நவீனத்துக்கும் உள்ள வேறுபாடுகள் தெரியும்.
10. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது வரலாற்றுக்கும் புராண இதிகாசங்களுக்கும் உள்ள வித்தியாசம் புரியும்.
11. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது நாம் வாழும் சமூகத்துக்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற ஆவல் ஏற்படும்.
12. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது காக்கை குருவி, கடல், மலை, என்று இயற்கையை ஆராதிக்கத்தோன்றும்.
13. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது காதலின் ஊற்றுக்கண் பொங்கிப்பிரவகிக்கும்.
14. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது சாதி, மதத்தின் பின்னுள்ள சதிவலையைப் புரிந்து கொள்ள முடியும்.
15. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது இந்த உலகத்தின் மீது விரிந்துள்ள ஏகாதிபத்தியத்தின் சதிவலையைத் தெரிந்து கொள்ள முடியும்.
16.ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது பார்க்கிற அத்தனை ஜீவராசிகள் மீதும் அன்பு கொள்ளத் தோன்றும்.
17. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது சமத்துவமற்ற, ஏற்றதாழ்வுகளுள்ள இந்த சமூகத்தின்மீது கோபம் பொங்கும்.
18. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது மனிதனை மனிதன் சுரண்டும் அமைப்பினை மாற்றத்தோன்றும்.
19. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது இந்த உலகினை மாற்றப் புரட்சி செய்யவும் அதற்காக ஆயுதம் ஏந்தவும் தோன்றும்.
20. புத்தகம் மனிதகுலத்தின் அறிவுச்சொத்து. வாசியுங்கள்! வாசியுங்கள்! வாசியுங்கள்!
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo