Onetamil News Logo

கருணாநிதி நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை 

Onetamil News
 

கருணாநிதி நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை     


சென்னை 2018 ஆகஸ்ட் 10:தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதியின் பின்புறம் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
சமாதியின் அருகில் கருணாநிதியின் மிகப்பெரிய படம் வைக்கப்பட்டுள்ளது. அங்கு தி.மு.க. கொடி நடப்பட்டுள்ளது. சமாதியை சுற்றி பூக்களால் அலங்காரம் செய்து வைக்கப்பட்டுள்ளது.தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று பகல் 12 மணியளவில் கருணாநிதி சமாதிக்கு வந்தார். சமாதியில் மாலை வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.அவருடன் ஆ.ராசா, கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, மா.சுப்பிரமணியன், பி.கே. சேகர்பாபு ஆகியோரும் அஞ்சலி செலுத்தினார்கள்.கவிஞர் வைரமுத்து இன்று காலை கருணாநிதி சமாதியில் பால் ஊற்றி அஞ்சலி செலுத்தினார். பேராயர் எஸ்றா சற்குணமும் இன்று கருணாநிதி சமாதியில் அஞ்சலி செலுத்தினார்.
இன்று கருணாநிதி நினைவிடத்துக்கு ஏராளமான கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் வந்து அவரது சமாதியில் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். கருணாநிதியின் சமாதியை சுற்றிலும் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. அதன் அருகில் நின்ற படி பொதுமக்கள் சமாதியை பார்த்து மலர் தூவி அஞ்சலி செலுத்தி செல்கின்றனர். மாலை, மலர் வளையம் வைக்க விரும்புபவர்கள் உள்ளே சென்று சமாதியில் வைக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.பொதுமக்கள் ஏராளமானோர் சமாதிக்கு வந்த வண்ணம் உள்ளதால் அங்கு தற்காலிகமாக மேற்கூரை அமைக்கும் பணி நடந்து வருகிறது. சமாதியை சுற்றி நடந்து வந்து அஞ்சலி செலுத்தும் வகையில் வட்ட வடிவில் பிளாட்பாரமும் அமைக்கும் பணி தொடங்கி உள்ளது.
தி.மு.க. தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கூரை அமைக்கும் பணியை முன்னின்று கவனித்து வருகிறார்கள். சாரை சாரையாக மக்கள் கூட்டம் அதிகமாக வருவதால் போலீசார் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.கருணாநிதி சமாதிக்கு செல்லும் நுழைவு வாயிலான அண்ணா சமாதி முன்பு ஏராளமான மோட்டார்சைக்கிள்களிலும், கார்களிலும் வந்து மக்கள் இறங்கி செல்வதால் அங்கு நெரிசலும் ஏற்பட்டு வருகிறது. கூட்டம் அதிகம் இருப்பதால் அங்கு தற்காலிக கடைகளும் முளைத்துள்ளன.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo