Onetamil News Logo

14 வகையான நெகிழி பொருள்களுக்கு முற்றிலும்  தடை ;தமிழகத்தில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் ரூ.25,000 முதல் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் 

Onetamil News
 

14 வகையான நெகிழி பொருள்களுக்கு முற்றிலும்  தடை ;தமிழகத்தில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் ரூ.25,000 முதல் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் 


சென்னை  2019 பிப்ரவரி 13 ;14 வகையான நெகிழி பொருள்களுக்கு முற்றிலும்  தடை ;தமிழகத்தில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் ரூ.25,000 முதல் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்    
மூன்று முறைகளுக்கு மேல் அபராதம் விதித்த பிறகும் தடைசெய்யப்பட்ட நெகிழியை பயன்படுத்தினால் கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று தமிழக அரசு கூறியுள்ளது. 
பிளாஸ்டிக் எனப்படும் நெகிழி பொருட்களை பயன்படுத்த விதிக்கப்பட்டுள்ள தடை சட்டம் தமிழகத்தில் ஜனவரி மாதம் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. அதன்படி உணவுப் பொருள்களை கட்ட பயன்படுத்தப்படும் நெகிழி தாள், நெகிழிகளால் ஆன தெர்மாகோல் தட்டுகள், நெகிழி பூசப்பட்ட காகிதக் குவளைகள், நெகிழி குவளைகள், நீர் நிரப்ப பயன்படும் பைகள், நெகிழி பொட்டலங்கள், நெகிழி தூக்கு பைகள், நெகிழி கொடிகள், நெகிழி விரிப்புகள், நெகிழி பூசப்பட்ட காகிதத் தட்டுகள், நெகிழி தேநீர் குவளைகள், நெகிழி உறிஞ்சுகுழல்கள், நெகிழி பூசப்பட்ட பைகள், நெய்யாத நெகிழி பைகள் போன்ற 14 வகையான நெகிழி பொருள்களுக்கு முற்றிலும் அப்போது தடை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து தமிழகத்தில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் ரூ.25,000 முதல் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்ற சட்ட முன்வடிவு மசோதாவை அமைச்சர் வேலுமணி இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.
இதனைத்தொடர்ந்து நெகிழியை சேமித்து வைத்தல் மற்றும் விற்பனை செய்தால் ரூ.1 லட்சம் வரை அபராதமாக வசூலிக்கப்படும் என இந்தச் சட்ட முன்வடிவில் கூறப்பட்டுள்ளது. சிறு வணிக விற்பனையாளர்களுக்கு ரூ.100 முதல் ரூ.500 வரை அபராதம் விதிக்கப்படும்என்றும் மளிகைக்கடை மற்றும் மருந்துக் கடைகளுக்கு, ரூ.1,000 முதல் ரூ.5,000 வரை அபராதமாக விதிக்கப்படும் என்றும் வணிக வளாகம், துணிக்கடை, பல்பொருள் அங்காடிகளுக்கு, ரூ.10,000 முதல் 25,000 வரை அபராதமாக விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. தடைசெய்யப்பட்ட நெகிழியை முதன்முறை பயன்படுத்துபவர்களுக்கு ரூ.25,000 அபராதமும், 2-வது முறை பயன்படுத்தினால் ரூ.50,000 அபராதமும், மூன்றாவது முறையும் பயன்படுத்தினால் ரூ.1 லட்சம் அபராதமாக விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo