Onetamil News Logo

நகத்தை பார்த்தால் நோய் என்னவென்று கூறிவிடலாம் ;நகத்தை கவனியுங்கள் 

Onetamil News
 

நகத்தை பார்த்தால் நோய் என்னவென்று கூறிவிடலாம் ;நகத்தை கவனியுங்கள் சென்னை , 2019 செப் 10 ;உடல் ஆரோக்கியம் நகத்தில் தெரியும்.உங்களுக்கு தெரியுமா?
நகங்களும் சுவாசிக்கும், வியர்வையை வெளியிடும் என்றால் நம்புவீர்களா? 
நகம் சொல்லிவிடும் நம் உடல் நலம் பற்றி நமது நகங்கள் நம் உடல்  ஆரோக்கியம் குறித்து பல விஷயங்களைச் சொல்லும். அதில் ஊட்டச்சத்து குறைபாடு முதல் உடலில் உள்ள நோய்த்தொற்றுகள் வரை அனைத்தையும் நமது நகங்கள் நமக்கு ஒருசில மாறுதல்களால் சுட்டிக் காட்டும். 
நமது நகங்களில் ஏற்படும் மாற்றத்தை வைத்து நமது ஆரோக்கியத்தை அறிய முடியும். என்பார்கள். அது உண்மை தான். 
ஒருசில தொற்று, இன்பெக்ஷன் ஆகியிருந்தால் அதை நகங்களில் ஏற்படும் மாற்றத்தை வைத்து நாம் கண்டறியலாம். 
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது பழமொழி. ஆனால், அகத்தின் அழகு நகத்திலும் தெரியும். 
காரணம், உடலில் எந்த உறுப்பில் நோய் ஏற்பட்டாலும் அவற்றை நகம் மிகத்தெளிவாக காட்டி விடுகின்றன.
நம் உடலில் உள்ள கழிவகற்றும் உறுப்புகளினால் வெளியேற்ற முடியாத கழிவுகள் தான் நகங்களாக வளர்கின்றன.கெரட்டின் என்னும் உடல் கழிவுதான் நகமாக வளர்கிறது.
மனித உடலில் மிகவும் பலமானது விரல் நகங்களே. அதில் கெராடின் சத்து உள்ளது, இது காண்டாமிருகத்தின் கொம்புகளில் காணப்படுவது, மரணத்திற்குப்பிறகும் கூட நகம் ஒன்றுமே ஆகாது அழியாது.
எப்போதும் அதிக கோபத்துடனும் கொந்தளிப்புடனும் கவலையுடனும் இருப்பவர்களின் விரல்களில் நகம் இருப்பதில்லை. நகத்திற்குப் பதிலாக சிவப்பேறிய சதையே உள்ளது. 
 மன அழுத்தம், கவலை உள்ளவர்களின் விரல்களிலும் நகம் இருப்பதில்லை. அமைதியானவர்களின் விரல் நகங்கள் அளவோடு சீராக்கியதாக இருக்கும். 
அழகியல் உணர்வு உள்ளவர்களின் நகங்கள் நேர்த்தியாக திருத்தப்பெற்றும் இருக்கும். இவ்வாறு நகங்கள் மனதையும் வெளிப்படுத்துகின்றன‌.
லேசான சிவப்பு நிறத்தில் சற்று பளபளப்பாக இருக்கும் கைவிரல் நகங்களில் ஒரு சிறு வளர்பிறை வடிவம் இருந்தால் உடலில் நல்ல ரத்த ஓட்டத்தைக் குறிக்கும்.
 நகங்கள் மிகவும் சிவந்து காணப்பட்டால் உடலின் ரத்த அளவு அதிகம் என்பதைக் காட்டுகிறது.விரல் நகங்கள் சற்றே நீல நிறமாக இருந்தால் இதயம் பலவீனமாக இருப்பதாக அர்த்தம். நகம் மஞ்சள் நிறமாகவோ, வெளிர் மஞ்சள் நிறமாகவோ காணப்பட்டால் மஞ்சள் காமாலையின் அறிகுறி., கைவிரல் நகங்கள் உப்பினாற்போல் இருந்தால் ஆஸ்துமா போன்ற மூச்சு சம்பந்தமான நோய்கள் வர வாய்ப்புண்டு.
கைவிரல் நகங்களில் வெள்ளை புள்ளிகள் இருந்தால் உடல் நலம் குன்றி இருப்பதற்கு அடையாளம்.,கால்சியம், வைட்டமின், இரும்புச்சத்து குறைபாடுகள் இருந்தாலும், நகம் உடைந்தோ, குறுக்கே கோடுகளுடனோ காணப்படும். நகத்தில் புள்ளி புள்ளியாக குழிகள் காணப்பட்டால் ‘சோரியாசிஸ்’ எனப்படும் சரும நோய் ஏற்படும். 
 நகம் தடித்து கரடு முரடாக காணப்பட்டாலோ பூஞ்சை தொற்று ஏற்பட்டு இருக்கும். 
நகங்களின் அடியில் எண்ணெய் விட்டதுபோல காணப்படும். இதற்கு ‘ஆயில்ட்ராப்சிண்ட்ரோம்’ என்று பெயர். இதுவும் சரும நோயான சோரியாசிஸின் ஆரம்ப அறிகுறியே..
மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டிருந்தால் நகங்கள் மஞ்சள் நிறத்தில் காணப்படும்.
 விரல் நுனிகள் தடித்தும், வெளிப்புறமாக வளைந்தும் இருத்தல் நுரையீரல் அல்லது இதய நோய்க்கான அறிகுறிகளுள் ஒன்றாகும்.
 நகத்தில் மஞ்சள் கோடுகள் இருப்பதற்கு காரணம், புகைபிடிப்பதனால் நிக்கோடின் கறை படிந்து ஏற்பட்டதாக இருக்கலாம்.
 கைகளின் மேலே ப்ரௌன் அல்லது சிவப்பு நிறத்தில் இருத்தல் நீரிழிவு முற்றிய நிலையில் இருப்பதற்கான அறிகுறிகளுள் ஒன்று. நீரிழிவு நோயாளிகளுக்கு நரம்புகள் மற்றும் இரத்த நாளங்கள் பலவீனமடைந்து இருக்கும். இதனால் உடலுக்குள் இரத்த கசிவு ஏற்பட்டு அதனால் கைகளின் மேல் ப்ரௌன் அல்லது சிவப்பு நிறத்தில் இருக்கும்.
விரல்கள் வீங்கி கொழுகொழுவென்று நீளமாக இருத்தல் ஹைப்போ தைராய்டிசம் (hypothyroidism) இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது என்று அர்த்தம். மேலும் தைராய்டு சுரப்பில் ஹார்மோன்களானது குறைவாக சுரக்கப்பட்டால், அது மெட்டபாலிசத்தை (Metabolism) குறைத்து, உடல் பருமனை அதிகரித்து, உடலில் நீரை தேக்கி குண்டாக காண்பிக்கும்.
பெண்களுக்கு, ஆள்காட்டி விரலை விட மோதிர விரல் நீளமாக இருத்தல் 
ஆஸ்டியோபோரோசிஸ் (Osteoporosis) வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக அர்த்தம்.
இருதய நோய், நுரையீரல் நோய் உள்ளவர்களுக்கு கைவிரல் நகங்கள் குவிந்து, பருத்து, பளபளவென்று முருங்கைக்காய் போன்று இருக்கும், இதை `க்ளப்பிங்’ என்று கூறுவதுண்டு
இரசாயன சோப்பு பயன்படுத்துவதை தவிர்க்கவும். இயற்கை மூலிகை பொடிகளை பயன்படுத்தலாம். 
நகப்பூச்சை தவிர்த்து மருதாணி பயன்படுத்தவும். 
இரத்த சோகை ஏற்படுவதாலும் கூட வெளிரிய மற்றும் மெல்லிய நகங்களை காணலாம். இந்த அறிகுறியோடு சோர்வும் சேர்ந்து வந்தால், மருத்துவரை அணுகுவது நல்லது.
கை விரல் நகப்பூச்சின் இரசாயனம் உணவோடு வயிற்றில் சேர்ந்து பல உபாதைகளை ஏற்படுத்தும்.
மங்கலான நீண்ட கோடுகள் தென்பட்டால் மூட்டுவலி உள்ளதாக காட்டும்.
வாழ்க்கைக்கு மிகவும் இன்றியமையாத நகங்களை, நகமும் சதையும் என்றாற்போல அக்கறையுடன் பேணிப்பாதுகாத்து நல‌மாக வாழ்வோம்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo