Onetamil News Logo

திரைப்பட நடிகர் & இயக்குனருமான ராஜசேகர் இன்று காலமானார்.

Onetamil News
 

திரைப்பட நடிகர் & இயக்குனருமான ராஜசேகர் இன்று காலமானார்.


சென்னை 2019 செப் 8 ; நடிகர்.ராஜசேகர் இன்று காலமானார். ,ராபர்ட் - ராஜசேகர் என்ற ஒளிப்பதிவாளராக ..  T, ராஜேந்தர், போன்ற பலருக்கு வெளிச்சம் தந்த ஒரு தலை ராகத்தின் ஒளிப்பதிவு இரட்டையர்களில் ஒருவர் ராஜசேகர்.
பாரதிராஜா இயக்கத்தில் நிழல்கள் படத்தில் ஹீரோவாக நடித்தவர் ராஜசேகர். அந்தப் படத்தில் இடம் பெற்ற இது ஒரு பொன்மாலைப்பொழுது என்ற பாடலும் இவருக்கான அடையாளங்களுள் ஒன்று.
இவரது நண்பர் ராபர்ட் உடன் இணைந்து பாலைவனச் சோலை' 'மனசுக்குள் மத்தாப்பூ', 'சின்னப்பூவே மெல்லப் பேசு', 'தூரம் அதிகமில்லை', 'பறவைகள் பலவிதம்', 'தூரத்துப் பச்சை', 'கல்யாணக் காலம்' ஆகிய படங்களை இயக்கி ராபர்ட் - ராஜசேகர் என்ற இரட்டை இயக்குநர்களாக தமிழ் சினிமாவில் வலம் வந்தனர்.
இயக்குநராக மட்டுமில்லாமல் நடிகராக வலம் வந்த இவர், சின்னத்திரைத் தொடர்களிலும் நடித்து வந்தார். மேலும் சின்னத்திரை சங்கங்களிலும் பொறுப்பு வகித்தார்.
கடந்த சில நாட்களாக உடல் நலக் குறைபாட்டால், ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜசேகர் இன்று காலை காலமானார். அவரது மறைவுக்கு திரைத்துறையினரும், சின்னத்திரை கலைஞர்களும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
ஒன்றிரண்டு படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்தும் போதே பாரதிராஜாவால் நிழல்கள் படத்தில் கதாநாயகனாக அறிமுகப்படுத்தப்பட்டவர்,  திரை உலகில் ஜொலிக்க முடியவில்லை என்றாலும், சின்னத்திரையில் சிறப்பாக பங்காற்றுகிறார். சமீப காலமாக ஒரு தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் சத்யா தொடரில் அவரது வசன உச்சரிப்பில் உடல் நல குறைவின் தடுமாற்றம் தெரிந்தது. கடைசியாக அவர் தோன்றிய காட்சிகளில் அவருக்கு டப்பிங் வாய்ஸ் தரப் பட்டிருந்தது. சிறந்த பண்பாளர் ஒளிப்பதிவாளர் ராஜசேகரனின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo