இயற்கை வேளாண் விஞ்ஞானி நெல் ஜெயராமன், புற்றுநோயால் இன்று மரணம்
சென்னை, 2018 டிசம்பர் 6 ; சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நெல் ஜெயராமன் இன்று காலை 5.10 மணியளவில் காலமானார்.
இயற்கை வேளாண் விஞ்ஞானி எனப்போற்றப்படும் நெல் ஜெயராமன், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை 5.10 மணியளவில் நெல் ஜெயராமன் உயிர் பிரிந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். 2 ஆண்டுகளாக புற்று நோயால் அவதிப்பட்டு வந்த நெல் ஜெயரமான், அதற்காக சிகிச்சை பெற்று வந்தார். பாரம்பரிய நெல் வகைகளை காப்பாற்றியதற்காக மாநில, தேசிய விருதுகளை நெல் ஜெயராமன் பெற்றிருக்கிறார். நெல் ஜெயராமன் 174 அரியவகை நெல் வகைகளை சேகரித்ததுடன், மரபணு மாற்ற விதை திட்டங்களுக்கு எதிராகவும் நெல் ஜெயராமன் குரல் கொடுத்து வந்தார்.