Onetamil News Logo

ரஜினிகாந்த்தின் இளைய மகள்  சௌந்தர்யா – விசாகன்  இரண்டாவது திருமணம் இன்று  போயஸ் கார்டன் வீட்டில் நடந்தது! 

Onetamil News
 

ரஜினிகாந்த்தின் இளைய மகள்  சௌந்தர்யா – விசாகன்  இரண்டாவது திருமணம் இன்று  போயஸ் கார்டன் வீட்டில் நடந்தது! 


சென்னை  2019 பிப்ரவரி 10 ; சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் இளைய மகள் சௌந்தர்யாவின் இரண்டாவது திருமணம் இன்று பிப்ரவரி 10 ஆம் தேதி நடைபெற்றது.  சௌந்தர்யா – விசாகன் திருமணம்… போயஸ் கார்டன் வீட்டில் நடந்தது! நேற்று முன்தினம் நடைபெற்ற விருந்தில் தாம்பூலப்பையில் விதைகள் கொடுத்து ரஜினி அசத்தினார்.
ரஜினி மகள் சௌந்தர்யாவுக்கும் பிரபல தொழிலதிபர் விசாகனுக்கும் இன்று (10-ந்தேதி) ரஜினியின் போயஸ் கார்டன் வீட்டில் நெருங்கிய சொந்தங்கள் முன்னிலையில் திருமணம் நடந்தது.திருமண நிகழ்ச்சியின் முதல் நிகழ்வாக நேற்று ரஜினிகாந்த் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
 
ரஜினியுடன் நெருக்கமான நட்பில் இருக்கும் நல்லி குப்புசாமி, கண்ணதாசன் மகன் குடும்பம், ஆடிட்டர்கள், வங்கி அதிகாரிகள், உறவினர்கள் என சினிமா சாராத நபர்கள் அழைக்கப்பட்டு இருந்தனர்.பொதுவாக, திருமணத்துக்கு வந்து வாழ்த்துபவர்களுக்குத் தாம்பூலப்பை கொடுப்பது தான் வழக்கம். சிலர் மரக்கன்றுகளைக் கொடுக்கின்றனர். ரஜினி வித்தியாசமாக விதைப்பந்து கொடுத்து விருந்தினர்களை அசத்தினார்.
அந்த விதைப்பந்தில் உள்ளது எந்த மரத்தின் விதைகள் என்ற தகவலும் அதில் இடம்பெற்றுள்ளது. மரம் வளர்க்க விரும்புபவர்கள், முடிந்தவர்கள் அந்த விதைகளை நட்டு மரம் வளர்க்கலாம். முடியாதவர்கள் ஏதோ ஒரு இடத்தில் வீசி எறிந்தால் போதும். அந்த விதை செடியாக வளர்ந்துவிடும். ரஜினியின் இந்த அசத்தல் ஐடியாவுக்கு சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.நேற்று ரஜினிகாந்தின் போயஸ் கார்டன் வீட்டில் ராதா கல்யாண வைபவம் நடக்கிறது. இன்று மிக நெருக்கமான உறவினர்கள் முன்னிலையில் வீட்டிலேயே எளிமையாக திருமணம் நடந்தது.அதைத் தொடர்ந்து நாளை 11-ந்தேதி எம்.ஆர்.சி நகரில் உள்ள லீலா பேலஸ் நட்சத்திர ஓட்டலில் வரவேற்பு நடைபெற உள்ளது. இதில் சினிமா, அரசியல் பிரபலங்கள் கலந்துகொள்கின்றனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வீட்டில் மகளின் இரண்டாவது திருமணம் என்பதால், திருமணத்தை எளிமையாக வீட்டில் தான் வைக்க வேண்டும் என ரஜினி ஆர்டர் போட்டதால், இந்த முடிவுக்கு குடும்பத்தினர் ஒப்புக்கொண்டதாக நெருங்கிய வட்டாரத்தினர் கூறியுள்ளனர். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo