Onetamil News Logo

மதத்தை வைத்து அரசியல் செய்வதை வன்மையாக கண்டிக்கிறேன்.  - ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி

Onetamil News
 

மதத்தை வைத்து அரசியல் செய்வதை வன்மையாக கண்டிக்கிறேன் - ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி


சென்னை 2020 பிப்ரவரி 27 ;சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-  சிஏஏ சட்டத்தால் இஸ்லாமியர்கள் பாதிக்கப்பட்டால் அவர்களுக்காக நிற்பேன் என்றே கூறினேன். மதத்தை வைத்து அரசியல் செய்வதை வன்மையாக கண்டிக்கிறேன்.
டிரம்ப் போன்ற தலைவர் வரும் நேரத்தில் போராட்டத்தை மத்திய அரசு கட்டுப்படுத்தியிருக்க வேண்டும். டெல்லியில் வன்முறையை ஒடுக்காவிட்டால் ராஜினாமா செய்யுங்கள். டெல்லி வன்முறையை மத்திய அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி இருக்க வேண்டும்.  இதற்காக மத்திய அரசை நான் கண்டிக்கிறேன். டெல்லியில் ஏற்பட்ட வன்முறைக்கு மத்திய உளவுத்துறையின் தோல்வியே காரணம்.  டெல்லி போராட்டங்கள் மிகவும் அதிகம் போய்க்கொண்டிருக்கிறது. வன்முறைக்கு இடம் தரக்கூடாது. போராட்டம் வன்முறையாக மாறக்கூடாது அமைதியாக நடைபெறலாம். சிஏஏ நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி ஒப்பதலுக்கு பிறகு சட்டமாக்கப்பட்டது. குடியுரிமை திருத்தச்சட்டம் திரும்பப்பெறப்படும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. என்ன போராடினாலும் மத்திய அரசு இந்த சட்டத்தை திரும்பபெறாது என நினைக்கிறேன். நான் பாஜகாவின் ஊதுகுழல் , பாஜக என் பின்னால் உள்ளது என கூறுகிறார்கள். என்ன உண்மையோ அதை தான் சொல்கிறேன். என் பின்னால் பாஜக இருப்பதாக கூறுவது வருத்தமளிக்கிறது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo