Onetamil News Logo

சினிமா துறையை சீரமைக்கவும், திரையரங்குகளில் டிக்கெட் கட்டணத்தை ஒழுங்குபடுத்தவும் ;வரும் ஏப்ரல்  4-ந் தேதி நடிகர்-நடிகைகள்  கோட்டை நோக்கி  ஊர்வலம் 

Onetamil News
 

சினிமா துறையை சீரமைக்கவும், திரையரங்குகளில் டிக்கெட் கட்டணத்தை ஒழுங்குபடுத்தவும் ;வரும் ஏப்ரல்  4-ந் தேதி நடிகர்-நடிகைகள்  கோட்டை நோக்கி  ஊர்வலம் 


சென்னை 2018 மார்ச் 30 ;
சினிமா துறையை சீரமைக்கவும், திரையரங்குகளில் டிக்கெட் கட்டணத்தை ஒழுங்குபடுத்தவும் பட அதிபர்கள் ஒரு மாதமாக வேலை நிறுத்தம் ஏப்ரல்  4-ந் தேதி நடிகர்-நடிகைகள்  கோட்டை நோக்கி  ஊர்வலமாக  சென்று முதல்-அமைச்சரிடம் மனு கொடுக்கிறார்கள்.
பட அதிபர்கள், புதிய படங்களை திரையிடும் டிஜிட்டல் சேவை அமைப்புகள் அதிக கட்டணம் வசூலிப்பதை கண்டித்தும், தியேட்டர்களில் டிக்கெட் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தியும் கடந்த 1-ந்தேதி முதல் புதிய படங்களை வெளியிடுவதை நிறுத்தி உள்ளனர். 16-ந்தேதி முதல் சினிமா படப்பிடிப்புகளையும் ரத்து செய்து விட்டனர்.
டிஜிட்டல் சேவை அமைப்பினருடனும், தியேட்டர் அதிபர்களுடனும் நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்துவிட்டன.
போராட்டம் குறித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:
“சினிமா துறையை சீரமைக்கவும், திரையரங்குகளில் டிக்கெட் கட்டணத்தை ஒழுங்குபடுத்தவும் பட அதிபர்கள் ஒரு மாதமாக வேலை நிறுத்தம் செய்கிறோம். டிஜிட்டல் சேவை அமைப்புகள் தியேட்டர்களில் வைத்துள்ள புரொஜக்டர்களுக்கு 10 வருடமாக தயாரிப்பாளர்கள் தவணை தொகையை செலுத்தி உள்ளோம்.  ரொஜக்டர்களுக்கு பட அதிபர்களிடம் பணம் வாங்குவது முறையல்ல. தியேட்டர்களில் கட்டண உயர்வால் கூட்டம் குறைந்துள்ளது. முதல் வரிசைக்கும், கடைசி வரிசைக்கும் ஒரே கட்டணம் வாங்குகின்றனர். ஏழைகளால் அதிக தொகை கொடுத்து படம் பார்க்க முடியவில்லை. பெரிய படங்களுக்கும், சிறிய படங்களுக்கும் ஒரே கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
சிறு பட்ஜெட் படங்களுக்கு கட்டணத்தை குறைக்க சொல்கிறோம். ஆன்லைன் டிக்கெட் முன்பதிவுக்கு கூடுதலாக ரூ.30 கட்டணம் வசூலிக்கப்பட்டு, தனியார் நிறுவனத்துக்கு அந்த பணம் போவதை அனுமதிக்க முடியாது. இதன் காரணமாக ஒரு டிக்கெட்டுக்கு ரூ.200 வரை கொடுக்க வேண்டியதுள்ளது. அதை ரத்து செய்யவேண்டும். தியேட்டர்களில் டிக்கெட் விற்பனையை கம்ப்யூட்டர் மயமாக்க வேண்டும். இதன்மூலம் ஒரு படத்தின் மொத்த வசூலும் தெரியவரும். அதை வைத்து நடிகர்கள் சம்பளத்தையும் தீர்மானிக்க முடியும். இந்த கோரிக்கைகள் குறித்து தியேட்டர் அதிபர்களுடன் ஆலோசித்தோம். ஆனால் தீர்வு ஏற்படவில்லை. கோரிக்கைகள் நிறைவேறுவதுவரை வேலை நிறுத்தம் தொடரும்.
இந்த பிரச்சினையை அரசிடம் கொண்டு செல்ல முடிவு செய்துள்ளோம். வருகிற புதன்கிழமை (4-ந் தேதி) திரையுலகினர் சென்னையில் கோட்டையை நோக்கி ஊர்வலமாக செல்ல இருக்கிறோம்.
ஊர்வலம் முடிவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும், செய்தித் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூவையும் சந்தித்து திரையுலக பிரச்சினையை தீர்க்கக்கோரி மனு கொடுப்போம். இந்த ஊர்வலத்தில் நடிகர், நடிகைகள், டைரக்டர்கள், பெப்சி தொழிலாளர்கள் உள்ளிட்ட திரையுலகின் அனைத்து சங்கங்களை சேர்ந்தவர்களும் கலந்து கொள்வார்கள் இவ்வாறு விஷால் கூறினார்.
பேட்டியின்போது, நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி, டைரக்டர் சங்க தலைவர் விக்ரமன், பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் கதிரேசன், பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு, ஒளிப்பதிவாளர்கள் சங்க தலைவர் பி.சி.ஸ்ரீராம் ஆகியோர் உடன் இருந்தனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo