Onetamil News Logo

இந்திய விடுதலைக்கு முன்னர் தூக்கிலிடப்பட்ட கொல்லப்பட்ட விடுதலை போராட்ட 73 தியாகிகளின் பெயர்கள் 

Onetamil News
 

இந்திய விடுதலைக்கு முன்னர் தூக்கிலிடப்பட்ட கொல்லப்பட்ட விடுதலை போராட்ட 73 தியாகிகளின் பெயர்கள் 


சென்னை 2019 ஆகஸ்ட் 15 ; இந்தியாவின் 73 வது சுதந்திர நாள் இன்று ,ஆனால் விடுதலைக்கு சர்வபரி தியாகம் செய்ய மாவீரர்களை மறந்து விட்டோம்.
இந்த பட்டியலில் தூக்கிலிடப்பட்ட கொல்லப்பட்ட விடுதலை போராட்ட 73 தியாகிகளின் பெயர்கள் உள்ளது.ஆயுள் தண்டனை (25வருடங்கள்) பெற்றவர்கள் மற்றும் 7 வருடங்கள் கடுமையான சிறைவாசம் என ஆயிரக்கணக்கில் தியாக சீலரைகளை  சொல்லமுடியும். ஆனால் சொல்ல மறந்து விட்டோம்.
ஆங்கிலேயரின் துப்பாக்கிக்கு பலியாகியவர் பலர். சித்திரவதைக்கு பாதிக்கப்பட்டவர்களின் பெயர்கள் சரியாகவும் நம்மிடம் இல்லை.காங்கிரஸ்,கம்யூனிஸ்ட், சோசலிஸ்ட் கட்சிகள், ஜனசங்கத்தை
நிறுவிய சியமா பிரகாஷ் முகர்ஜி என பலரின் தியாகங்களை மறைக்க முடியாது.       

தமிழகத்தில்,பிற்காலத்தில் காங்கிரஸில் இவர்கள் இல்லை என்றாலும்; வ உ சி, திருவிக, பெரியார்,இரட்டை மலை சீனிவாசன்,சேலம் வரதராஜீலு நாயுடு, செங்கோட்டை கரையாளர், பசும்பொன் தேவர் என பலரின் தியாகங்களை நினைத்து பார்க்க வேண்டும்.
1) ஷேர் அலி 8.2.1872
2) வாசுதேவ் சாபேக்கர் 8.5.1899
3) பாலகிருஷ்ண சாபேக்கர் 8.5.1899
4) விநாயக் ரானடே 8.5.1899
5) பிரபுல்ல சக்ரவர்த்தி (சக்கி) 30.4.1908
6) குதிராம் போஸ் 11.8.1908
7) சத்யேந்திரநாத் போஸ் 10.11.1908
8)கனையாலால் 10.11.1908
9) சாருசந்திர ராய் 10.11.1908
10) திருநெல்வேலி கலவரத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட நால்வர் 13.3.1908
11) மதன்லால் திங்ரா 9.8.1909
12) கோபால் சென் 3.6.1908
13) ஆனந்த் லட்சுமணன் கான்காரே 19.4.1910
14) தேஷ் பாண்டே 19.4.1910
15) கார்வே 19.4.1910
16) வாஞ்சிநாதன் 17.6.1911
17) அமீர்சந்த் 8.5.1915
18) பாய் பாலமுகுந்த் 8.5.1915
19) அவத்பிகாரி 8.5.1915
20) வசந்த்குமார் பிஸ்வாஸ் 10.5.1915
21) கர்த்தார்சிங் 16.11.1915
22) விஷ்ணு கணேஷ் பிங்களே 16.11.1915
23) பாய் பக்ஷீஸ் சிங் கில்வாலி 16.11.1915
24) பாய் பி. சுரேய்ன்சிங் 16.11.1915
25) பாய் ஐ. சுரேய்ன்சிங் 16.11.1915
26) பாய் ஜகத்சிங் 16.11.1915
27) ஹர்ணாம்சிங் பட்டிகொராயா 16.11.1915
28) மேவாசிங் 16.11.1915
29) பண்டிட் சோகன்லால் பதக் ........... 1916
30) பாய் ஹர்ணாம்சிங் ........... 1916
31) சாலியாராம் ஷானேவால் ........... 1916
32) பசாவாசிங் பாரா ........... 1916
33) நாராயண்சிங் பல்லோ ........... 1916
34) நரஞ்சன்சிங் சங்கட்புரா ........... 1916
35) சச்சீந்திரநாத் சன்யால் ........... 1916
36) சாரு சந்திரபாசு 16.3.1909
37) சித்தப்பிரியாரே 16.3.1909
38) ஜதீந்திரநாத் முகர்ஜி 16.3.1909
39) கோபிநாத் சாகா 1.3.1924
40) ராம்பிரசாத் பிஸ்மில் 17.12.1927
41) ராஜேந்திரநாத் லஹரி 17.12.1927
42) அஷ்பகுல்லா 19.12.1927
43) ரோஷன் சிங் 19.12.1927
44) லாலா லஜபதிராய் 17.11.1928
45) சந்திரசேகர் ஆசாத் 27.2.1931
46) பகத்சிங் 23.3.1931
47) சுகதேவ் 23.3.1931
48) ராஜகுரு 23.3.1931
49) சூர்யாசென் 11.1.1934
50) தாரகேஸ்வர் 11.1.1934
51) தஸ்தகீர் 11.1.1934
52) சட்டார்சிங் 29.7.1944
53) நசீர் சிங் 29.7.1944
54) துர்க்காமால் 25.8.1944
55) ஹசாரா சிங் 25.10.1944
56) சர்தாரா சிங் 23.3.1945
57) நாகேந்திர சிங் 28.8.1943
58) கேசரிசந்த் சர்மா 3.5.1945
59) சரண்சிங் 28.8.1943
60) தல்பஹதூர் தாப்பா 3.5.1945
61) தல்பாரா சிங் 3.5.1945
62) சமன்சிங் 3.5.1945
63) எஸ்.இ. பரதன் 10.9.1943
64) ப்ரீதம் சிங் 10.9.1943
65) குருசரண் சிங் 10.9.1943
66) டி.பி. குமாரன் 10.9.1943
67) போடார்க் 10.9.1943
68) கர்த்தார்சிங் 4.12.1945
69) முகம்மது அப்துல் காதர் 10.9.1945
70) ராமுத்தேவர் 7.7.1944
71) ராமசாமி ஒன்றிரியார் 7.7.1944 
72) அஜாய் சிங் 1945
73) சாகூர் அகமது 23.8.1943.
இப்படி பல தியாகிகளின் தியாகங்களை நினைவு கூற கூட நமக்கு மனது இல்லை.
"தாயின் மணிக்கொடி பாரீர், அதை தாழ்ந்து பணிந்து வணங்கிட வாரீர்" என சுதந்திரத்துக்கு முன்பே அதைபற்றி கனவு கண்டான் பாரதி
பாரதிக்கும் இந்த மாவீரர்களுக்கு கிடைக்காத வாய்ப்பினை அந்த சுதந்திர இந்தியாவினை காண வாய்ப்பு நமக்கு
கிடைத்துள்ளது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo