Onetamil News Logo

பட்ஜெட் உரையில் பெட்ரோல், மதுபானம் தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை ; வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் அனைத்து குடும்பங்களுக்கும் பயனளிக்கும் வகையில், விரிவான விபத்து மற்றும் ஆயுள் காப்பீட்டு திட்டம் ஒன்றை தமிழக  அரசு விரைவில் அறிமுகப்படுத்தும்.

Onetamil News
 

பட்ஜெட் உரையில் பெட்ரோல், மதுபானம் தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை ; வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் அனைத்து குடும்பங்களுக்கும் பயனளிக்கும் வகையில், விரிவான விபத்து மற்றும் ஆயுள் காப்பீட்டு திட்டம் ஒன்றை தமிழக  அரசு விரைவில் அறிமுகப்படுத்தும்.



சென்னை,  2019 பிப்ரவரி 8; மாற்றுத்திறனாளிகளுக்கு 3 ஆயிரம் ஸ்கூட்டர்கள் வழங்கப்படும், விவசாயி களுக்கு ரூ.10 ஆயிரம் கோடி பயிர்க்கடன் வழங்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் தமிழக பட்ஜெட்டில் இடம்பெற்று உள்ளன.
2019-2020-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட் (வரவு-செலவு திட்டம்) நேற்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. நிதி இலாகா பொறுப்பை வகிக்கும் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 
இதற்காக நேற்று காலை 9.57 மணிக்கு பட்ஜெட் புத்தகம் அடங்கிய சூட்கேசுடன் அவர் அவைக்கு வந்தார். அந்த சூட்கேசில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உருவப்படம் ஒட்டப்பட்டு இருந்தது.
ஓ.பன்னீர்செல்வத்துடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் வந்தார். காலை 10 மணிக்கு சட்டசபை கூட்டம் தொடங்கியது.
ஓ.பன்னீர்செல்வம் காலை 10.01 மணிக்கு பட்ஜெட் உரையை வாசிக்க தொடங்கினார். இடைவிடாமல் வாசித்த அவர் மதியம் 12.39 மணிக்கு தனது உரையை நிறைவு செய்தார். அதாவது, தொடர்ந்து 2 மணி 38 நிமிடங்கள் பட்ஜெட் உரையை அவர் வாசித்தார்.
முன்பெல்லாம் பட்ஜெட் உரையில் புதிய வரி விதிப்பு, வரிச் சலுகை தொடர்பான அறிவிப்புகள் இடம்பெற்று இருக்கும். ஆனால், நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பான ஜி.எஸ்.டி. அறிமுகமான பிறகு, மத்திய அரசு மட்டுமே வரி தொடர்பான அறிவிப்புகளை வெளியிட முடியும். என்றாலும், பெட்ரோல், மதுபானம் போன்றவற்றுக்கான வரி வசூல் மட்டும் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால், பட்ஜெட் உரையில் பெட்ரோல், மதுபானம் தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
என்றாலும் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு சலுகைகள், ஏழைகளுக்கு விபத்து மற்றும் ஆயுள் காப்பீட்டு திட்டம், மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர்கள், சென்னை, மதுரை, கோவையில் மின்சார பஸ்கள், அப்துல் கலாம் பெயரில் புதிய கல்லூரி உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் இடம் பெற்று உள்ளன. பட்ஜெட் உரையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-
2018-2019-ம் ஆண்டில் 1.80 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் நுண்ணீர் பாசன திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நிதி ஆண்டில் ரூ.1,361 கோடி நிதி ஒதுக்கீட்டில் மேலும் 2 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகளை அமைப்பதற்காக விவசாயிகளுக்கு அரசு 90 சதவீதம் மானியம் அளிக்கிறது. இந்த நிதி ஆண்டில் ரூ.84.09 கோடி மானிய உதவியுடன், 10 குதிரை திறன் வரையுள்ள சூரிய சக்தியால் இயங்கும் 2 ஆயிரம் பம்புசெட்டுகளை விவசாயிகளுக்கு வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும்.
இந்த நிதி ஆண்டில் ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்கு பயிர்க்கடன் வழங்க உத்தேசிக்கப்பட்டு உள்ளது. இதுதவிர, பயிர்க்கடன்கள் மீதான வட்டி தள்ளுபடிக்காக ரூ.200 கோடி வரவு - செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
முதல்-அமைச்சர் ஏற்கனவே அறிவித்தபடி, ‘கஜா’ புயல் பாதித்த மாவட்டங்களில் சேதம் அடைந்த குடிசைகளுக்கு மாற்றாக ஒரு வீட்டுக்கு ரூ.1.70 லட்சம் அலகுத் தொகை வீதம் ரூ.1,700 கோடி திட்ட மதிப்பீட்டில், ஒரு லட்சம் வீடுகள் கட்டுவதற்கான பணிகளை இந்த அரசு மேற்கொண்டு உள்ளது. இதற்கான திட்டச்செலவில் ரூ.720 கோடியை மத்திய அரசு தனது பங்காக ஏற்றுக்கொள்ளும் என எதிர்பார்க்கிறேன். மீதமுள்ள ரூ.980 கோடியை மாநில அரசின் பங்குத் தொகையாக தமிழ்நாடு ஊரக வீட்டு வசதி மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியம் மூலம் கடன் பெற்று இத்திட்டம் நிறைவேற்றப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
மதுரை மாவட்டத்தில் உள்ள திருமங்கலத்தை தலைமையிடமாக கொண்டு, திருமங்கலம், கள்ளிக்குடி மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய 3 வட்டங்களை உள்ளடக்கிய புதிய வருவாய்க் கோட்டம் ஒன்று இந்த நிதி ஆண்டில் உருவாக்கப்படும்.
 வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் அனைத்து குடும்பங்களுக்கும் பயனளிக்கும் வகையில், விரிவான விபத்து மற்றும் ஆயுள் காப்பீட்டு திட்டம் ஒன்றை இந்த அரசு விரைவில் அறிமுகப்படுத்தும். இத்திட்டத்தின் மூலம், இயற்கை மரணம் மற்றும் விபத்தால் ஏற்படும் மரணத்தின் போது வழங்கப்படும் இழப்பீட்டு தொகை, முறையே ரூ.2 லட்சம் மற்றும் ரூ.4 லட்சமும், விபத்தால் ஏற்படும் நிரந்தர ஊனத்திற்காக வழங்கப்படும் இழப்பீட்டு தொகை ரூ.1 லட்சமும் என உயர்த்தி வழங்கப்படும். இந்த திட்டத்திற்கான காப்பீட்டு கட்டணத் தொகைக்கு ரூ.250 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo