Onetamil News Logo

இ-பாஸ் முறை புதியதாக வரையறுக்கப்பட்ட லாக்டவுன்  தமிழகம் 8 மண்டலமாக பிரிக்கப்பட்டுள்ளது.

Onetamil News
 

இ-பாஸ் முறை புதியதாக வரையறுக்கப்பட்ட லாக்டவுன்  தமிழகம் 8 மண்டலமாக பிரிக்கப்பட்டுள்ளது.


 தூத்துக்குடி 2020 மே 31 ;இ-பாஸ் முறை புதியதாக வரையறுக்கப்பட்ட லாக்டவுன்  தமிழகம் 8 மண்டலமாக பிரிக்கப்பட்டுள்ளது.
ஒரே மண்டலத்திற்குள் பயணம் செய்ய இ-பாஸ் தேவை இல்லை.
வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்துக்குள் நுழையவோ  அல்லது தமிழகத்திலிருந்து வெளி மாநிலங்களுக்கு செல்லவும் 8 மண்டலத்திற்கு இடையேயும் செல்வதற்கு இ-பாஸ் கட்டாயம் தேவை.
1வது மண்டலம் கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம்  மற்றும் திருப்பூர்.
2வது மண்டலம் தர்மபுரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் கிருஷ்ணகிரி.
3வது மண்டலம் விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி
4வது மண்டலம் நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை
5வது மண்டலம் திண்டுக்கல், மதுரை, தேனி, சிவகங்கை, விருதுநகர் மற்றும் இராமநாதபுரம்.
6வது மண்டலம் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி.
7வது மண்டலம் காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு.
8வது மண்டலம் சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதி.
மண்டலம் 7 மற்றும் 8 தவிர்த்து அனைத்து மண்டலங்களிலும் 50 சதவீத பேருந்து போக்குவரத்து 60 சதவிகித இருக்கைகளுடன் செயல்படும்.
அனுமதிக்கப்பட்ட இனங்களுக்கு தவிர மண்டலங்களுக்கு இடையேயும் வெளி மாநிலங்களுக்கும் பேருந்து போக்குவரத்து தடை தொடர்கிறது.
வருகிற 08/06/20  தேதி முதல் தேநீர் கடைகளில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் அனுமதி.
ஹோட்டல்களிலும் வாடிக்கையாளர்கள் அனுமதி.
வாடகை மற்றும் டாக்ஸி கார்களில் ஓட்டுநர் தவிர்த்து 3 பயணிகள் மட்டுமே அணுமதி.
ஆட்டோகளில் மற்றும் சைக்கிள் ரிக்ஷாவில் 2 பயணிகளுக்கு அனுமதி.
அனுமதிக்கப்பட்ட ஹோட்டல் மற்றும் அழகு நிலையங்கள் முடிதிருத்தும் நிலையங்களில் குளிர்சாதன வசதி இருந்தாலும் கட்டாயம் பயன்படுத்தக் கூடாது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo