Onetamil News Logo

தமிழகத்தில் மே 19ம் தேதி நடைபெறும் 4 தொகுதி இடைத்தேர்தலுக்கான நட்சத்திர பேச்சாளர் பட்டியலை அனுப்பி வைக்க தேர்தல் ஆணையம் அறிவிப்பு 

Onetamil News
 

தமிழகத்தில் மே 19ம் தேதி நடைபெறும் 4 தொகுதி இடைத்தேர்தலுக்கான நட்சத்திர பேச்சாளர் பட்டியலை அனுப்பி வைக்க தேர்தல் ஆணையம் அறிவிப்பு 



சென்னை  2019 ஏப்ரல் 13 ;தமிழகத்தில் மே 19ம் தேதி நடைபெறும் 4 தொகுதி இடைத்தேர்தலுக்கான நட்சத்திர பேச்சாளர் பட்டியலை வருகிற 22ம் தேதியில் இருந்து 29ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்று தேர்தல்  ஆணையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு  வெளியிட்டுள்ள அறிக்கை:அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தேர்தல் பிரசாரம் செய்யும்போது, விமானம் உள்ளிட்ட போக்குவரத்து செலவுகள் கட்சியின் வேட்பாளர் மற்றும் முகவர்கள் கணக்கில் சேராது. இந்த சலுகையை பெற, பிரசாரம் செய்யும்  தலைவர்களின் பட்டியலை தேர்தல் ஆணையத்திடம் அளிக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் 40 பேரின் பெயர் பட்டியலையும், அங்கீகாரமற்ற கட்சிகள் 20 பேரின் பெயர் பட்டியலையும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி  அல்லது தேர்தல் ஆணையத்துக்கு அனுப்ப வேண்டும்.
தேர்தல் செலவினத்தில் இருந்து விலக்கு பெறவேண்டிய இந்த தலைவர்கள் பட்டியலை, தேர்தல் அறிவிக்கை வெளியிட்டதிலிருந்து 7 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும். அதன்படி, சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம்  மற்றும் ஓட்டப்பிடாரம் (தனி) ஆகிய சட்டமன்ற பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிக்கை வருகிற 22ம் தேதி அன்று வெளியிடப்பட உள்ளது. செலவு தொகையில் இருந்து விலக்கு பெற விரும்பும் கட்சிகள் தங்கள்  கட்சியின் சார்பில் பிரசாரம் செய்யும் தலைவர்களின் பெயர் பட்டியலை தெரிவித்து இந்திய தேர்தல் ஆணையம் அல்லது தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு வருகிற 29ம் தேதிக்குள்  விண்ணப்பிக்க வேண்டும். இந்த பட்டியலில் உள்ளவர்களின் பயண செலவுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படும். இதுதவிர மற்ற செலவினங்கள் அனைத்தும் வேட்பாளரின் செலவு கணக்கில் சேர்க்கப்படும். அதேநேரம், வேட்பாளருக்கு வேறு கட்சியின்  நட்சத்திர தலைவர் பிரசாரம் செய்தால், அதில் விலக்கு கோர இயலாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo