Onetamil News Logo

சர்கார் படத்தை பார்த்து பயப்படும் அளவுக்கு இந்த அரசாங்கம் வலுவற்றதாக இருக்கிறது ;நடிகை வரலட்சுமி டுவிட்டரில் கருத்து 

Onetamil News
 

சர்கார் படத்தை பார்த்து பயப்படும் அளவுக்கு இந்த அரசாங்கம் வலுவற்றதாக இருக்கிறது ;நடிகை வரலட்சுமி டுவிட்டரில் கருத்து 


சென்னை  2018 நவம்பர் 10; விஜய் நடிப்பில் வெளிவந்துள்ள சர்கார் படம் பற்றிய பிரச்சனை தற்போது தீர்ந்துள்ளது. வழக்கம் போல எல்லா திரையரங்குகளிலும் சர்கார் படம் திரையிடப்படுகிறது. சர்கார் படத்தில் சில காட்சிகள் மற்றும் வசனங்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன.                                                                  
                                                                                                                                                                                       
   இந்நிலையில், சர்கார் சர்ச்சைகளில் வரலட்சுமி ஏற்று நடித்த கோமளவல்லி கதாபாத்திரமும் ஒன்று. தற்போது அந்த பெயர் வரும் இடங்கள் மியூட் செய்யப்பட்டுள்ளது. சர்கார் படத்திற்கு எழுந்த சர்ச்சை குறித்து வரலட்சுமி டுவிட்டரில் கூறியிருப்பதாவது :"ஒரு படத்தை பார்த்து பயப்படும் அளவுக்கு இந்த அரசாங்கம் வலுவற்றதாக இருக்கிறது. உங்கள் பெயரை நீங்களே கெடுத்து கொள்ளாதீர்கள். தயவு செய்து இந்தமாதிரியான முட்டாள்தனத்தை நிறுத்துங்கள். படைப்பாற்றலின் சுதந்திரத்தை பறிக்காதீர்கள்" என பதிவிட்டிருக்கிறார். 
சர்கார் பட பாடலாசிரியர் விவேக் டுவிட்டரில் கூறியிருப்பதாவது : எங்கள் உணர்வுகளையும், உரிமைகளையும் வன்முறை மூலம் ஒடுக்கிவிட முடியும் என நினைப்பவர்களுக்கு முதலில் இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தி விடுகிறேன். ஒரு குரலை அடக்கினால் கர்ஜனையை கேட்க செய்வோம். நீங்கள் தணிக்கை துறையை மூடிவிடுங்கள், நாங்கள் புரொமோஷன் துறையை மூடிவிடுகிறோம். இது முட்டாள்தனமானது, நிறுத்துங்கள் என பதிவிட்டிருக்கிறார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo