Onetamil News Logo

சென்னை மீன் ஊட்டச்சத்து மற்றும் உணவு தொழில்நுட்பக் கல்லூரி சார்பில் பல்வேறு போட்டிகள் 

Onetamil News
 

சென்னை மீன் ஊட்டச்சத்து மற்றும் உணவு தொழில்நுட்பக் கல்லூரி சார்பில் பல்வேறு போட்டிகள் 


சென்னை  2019 அக்டோபர் 2 ;மகாத்மாகாந்தியின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் உறுப்புக்கல்லுரியான மீன் ஊட்டச்சத்து மற்றும் உணவு தொழில்நுட்பக் கல்லூரி மாதவரம் பால் பண்ணையில் சார்பாக மாதவரம் சுற்று வட்டார பள்ளிகளுக்கிடையே கட்டுரை எழுதுதல்,படம் வரைதல்,சுவரொட்டி தயாரித்தல் மற்றும் மேற்கோளுரை எழுதுதல் என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் மாதவரம் சுற்று வட்டார பகுதிகளில் உள்ளபள்ளிகளில் இருந்து சுமார் 110 மாணவர்கள் கலந்து கொண்டனர். அக்டோபர் 2ம் தேதியன்று காந்தி ஜெயந்தியைகொண்டாடும் விதமாக விழா நடத்தப்பட்டது. இவ்விழாவை கல்லூரி முதல்வர் முனைவர் உஷா ஆண்டனிஅவர்கள் விழாவை தொடங்கிவைத்து வரவேற்புரையாற்றினார். மேலும் இவ்விழாவினை சிறப்பிக்கும் விதமாக சிறப்பு விருந்தினர் முனைவர் ஸ்ரீலட்சுமி (பேராசிரியர்ஓய்வு) அவர்கள்கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். போட்டிகளில் வெற்றி பெற்றமாணவர்களுக்குபரிசுகள் வழங்கப்பட்டது. இதில் சி.எஸ்.ஐ. பெயின் மெட்ரிக்குலேசன் உயர்நிலைப்பள்ளி,கொடுங்கையூர்,பள்ளிமாணவர்கள் முதல் இடத்தைப் பிடித்தனர். வேலம்மாள் நியூ ஜென் பள்ளி, தபால்பெட்டி, பள்ளிமாணவர்கள் இரண்டாம் இடத்தைப் பிடித்தனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo