Onetamil News Logo

தமிழ்நாட்டில் 2019 நிலவரப்படி மொத்தம் 14 மாநகராட்சிகள்

Onetamil News
 

தமிழ்நாட்டில் 2019 நிலவரப்படி மொத்தம் 14 மாநகராட்சிகள்


தூத்துக்குடி 2019 பிப்ரவரி 13 ; தமிழக மாநகராட்சிகள் இந்தியாவின் மாநிலமான தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளாக மாநகராட்சிகள் செயல்படுகின்றன. மாவட்டத் தலைநகரங்கள் மற்றும் முக்கிய நகரங்களில் மக்கள் தொகைக்கேற்ப மாநகராட்சிகள் அமைக்கப்பெற்றுள்ளன.
தமிழ்நாட்டில் அதிகமான மக்கள் தொகையுடன் மிக அதிக வருவாயுடைய ஊர்களை மாநகராட்சிகளாகப் பிரித்துள்ளனர். தமிழ்நாட்டில் மொத்தம் 14 மாநகராட்சிகள் இருக்கின்றன. இம் மாநகராட்சிகளுக்கு அதன் மக்கள் தொகைக்கு ஏற்ப வார்டுகள் பிரிக்கப்படுகின்றன. வார்டுகளில் வாக்காளர்களாக உள்ள மக்களால் மாநகராட்சி மன்றத்திற்கு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த மாநகராட்சி மன்ற உறுப்பினர்களின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகளாக இருக்கிறது. இந்த மாமன்ற உறுப்பினர்களில் இருந்து ஒருவர் மாமன்றத் தலைவராகவும், ஒருவர் மாமன்றத் துணைத் தலைவராகவும் தேர்வு செய்யப்படுகின்றார். மாநகராட்சியின் உறுப்பினர்களைக் கொண்டு நடத்தப்படும் மாநகராட்சி மன்றக் கூட்டங்களில் பெரும்பான்மையான உறுப்பினர்களைக் கொண்டு நிறைவேற்றப்படும் தீர்மானங்களின்படி மாநகராட்சி ஆணையாளர் அந்தப் பணிகளை தனக்கு கீழுள்ள அலுவலர் மற்றும் ஊழியர்களைக் கொண்டு செயல்படுத்துகிறார். இந்த உறுப்பினர் பதவிகளுக்கு அரசியல் கட்சி சார்பாக போட்டியிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி 14 மாநகராட்சிகள் உள்ளன.
சென்னை மாநகராட்சி     ;8,696,010 ;    ;1688
மதுரை மாநகராட்சி     ;1,462,420     ;1971
கோவை மாநகராட்சி ;
(கோயம்புத்தூர்)     2,151,466     1981
திருச்சி மாநகராட்சி
(திருச்சிராப்பள்ளி)     1,021,717     1994
சேலம் மாநகராட்சி     1,013,388     1994
நெல்லை மாநகராட்சி
(திருநெல்வேலி)     474,838     1994
திருப்பூர் மாநகராட்சி     466,998     2008
ஈரோடு மாநகராட்சி     444,782     2008
வேலூர் மாநகராட்சி     421,327     2008
தூத்துக்குடி மாநகராட்சி     356,094     2008
தஞ்சாவூர் மாநகராட்சி     222.943     2014
திண்டுக்கல் மாநகராட்சி     207,225     2014
ஓசூர் மாநகராட்சி         2019
நாகர்கோயில் மாநகராட்சி     2019
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo