Onetamil News Logo

திரையிசைப் பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் வீட்டில் மரண நிகழ்வு ;திரையுலகத்தினர் கண்ணீர் அஞ்சலி 

Onetamil News
 

திரையிசைப் பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் வீட்டில் மரண நிகழ்வு ;திரையுலகத்தினர் கண்ணீர் அஞ்சலி 



சென்னை  2019 பிப்ரவரி 5; திரையிசைப் பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின்  தாயார் சகுந்தலம்மா, அவரது 89வது வயதில் இன்று அதிகாலை காலமானார். 
பிரபல தென்னிந்திய திரையிசைப் பாடகரும், நடிகருமான எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் தாயார் சகுந்தலம்மா. இவர், ஆந்திரா மாநிலம் நெல்லூரில் மகள் எஸ்.பி.ஷைலஜாவுடன் வசித்து வந்தார். இந்நிலையில், கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்றுவந்த சகுந்தலம்மா இன்று அதிகாலை மரணமடைந்தார். ‘எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இசை நிகழ்ச்சிக்காக லண்டன் சென்றுள்ளார். தாய் சகுந்தலம்மா மரணமடைந்த தகவல் அவருக்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து, இன்று மாலை அவர் நெல்லூர் வந்தடைவார் என எதிர்பார்க்கிறோம்’ என்று அவருடைய உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
எஸ்.பி.ஷைலஜா வீட்டில் வைக்கப்பட்டுள்ள சகுந்தலம்மாவின் உடலுக்கு உறவினர்கள், திரைத்துறையினர், பத்திரிகையாளர்கள், நண்பர்கள் என ஏராளமானோர் இறுதி மரியாதை செலுத்தி வருகின்றனர். 
நாளை காலை நெல்லூரில் சகுந்தலாவின் இறுதிச் சடங்குகள் நடைபெற்றதையடுத்து குடும்ப முறைப்படி, அவரது உடல் தகனம் செய்யப்படும்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo