Onetamil News Logo

பிப்ரவரி 14ம் தேதியை  வாலண்டைன்ஸ் டே என்று காதலர் தினம் உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது ;இந்திய கலாச்சாரத்திற்கு காதலர் தினம் தேவையா?

Onetamil News
 

பிப்ரவரி 14ம் தேதியை  வாலண்டைன்ஸ் டே என்று காதலர் தினம் உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது ;இந்திய கலாச்சாரத்திற்கு காதலர் தினம் தேவையா?சென்னை  2019 பிப்ரவரி 14 ;  உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினத்தில் காதலர்கள் தங்கள் அன்புக்குரியவர்களுக்கு பரிசு வாங்கி கொடுத்து இந்த நாள் முழுவதையும் சந்தோஷமாக இருப்பார்கள்.யாரைக் கேட்டும் மலர்கள் மலர்வதில்லை என்பது போல் காதலும் தானாகவே மலர்ந்து விடுகிறது. ஆனால், காதல் உணர்வுகள் நிரந்தரமானவை அல்ல என்பதும், சமூகத்தின் யதார்த்தம் பல நேரங்களில் காதலை மிஞ்சி விடுகிறது என்பதும் அனுபவம் மிக்க பெற்றோரின் கருத்தாக உள்ளது. 
                                                                                                                                                            வெளிநாட்டுக்காரர்கள் குடும்பத்தின் மீது அதிக பற்று வைத்திருக்க மாட்டார்கள். ஒரு குறிப்பிட்ட வயது வந்தவுடன் சொந்தக்காலில் நிற்பது, காதல், திருமணம், விவகாரத்து என்பதெல்லாம் அங்கு சர்வ சாதாரணம். அன்பு, பாசத்திற்கு பஞ்சம் உள்ள வெளிநாடுகளில் அன்பை வெளிப்படுத்த என ஒருநாளை கொண்டாடுகின்றனர்.                                                                                                                                                                            புனித வேலன்டைன் நாள் (Saint Valentine's Day) அல்லது பொதுவாக வேலன்டைன் நாள் (Valentine's Day) உலகம் முழுவதிலுமுள்ள மிக நெருங்கிப் பழகும் மக்கள் பலராலும் பிப்ரவரி 14 அன்று கொண்டாடப்படும் ஒரு கொண்டாட்ட நாளாகும். இந்நாளில் காதலர்கள் தங்கள் காதலை தெரிவித்துக் கொள்வது மரபாக இருக்கிறது. வாழ்த்து அட்டைகள், இனிப்புகள், மலர்கள் ஆகியவற்றை இந்நாளில் காதலர்கள் பரிமாறிக் கொள்கிறார்கள். வேலன்டைன் என்ற பெயருடைய இரு கிறித்துவத் தியாகிகளின் பெயர்களை அடுத்து இந்நாள் வேலன்டைன் நாள் என்றும் காதலர்களே பெரும்பாலும் இந்நாளைக் கொண்டாடுவதால் காதலர் நாள் என்றும் காதலர் தினம் என்றும் அழைக்கப்படுகிறது. காதலர்கள் தவிர பலரும் தங்கள் அன்பை தெரிவித்துக் கொள்ளும் நாளாகவும் இது இருப்பதால் அன்பர்கள் நாள் என்றும் அழைக்கப்படுகிறது. தோற்றத்தில் இது மேற்கத்திய உலகக் கொண்டாட்டமாக இருந்தாலும், அண்மைக் காலங்களில் உலகெங்கும் இந்நாளை கொண்டாடும் போக்கு இளைஞர்களிடையே கூடி வருகிறது. எனினும், இது மேலை நாட்டுப் பண்பாடுகளை திணிக்கும் முயற்சி என்றும் காதலின் பெயரால் நினைவுப் பரிசுப் பொருட்களை விற்கும் வணிகமயமாக்கம் என்றும் ஒரு சாராரால் குற்றம் சாட்டப்படுகிறது.
இந்த நாள், நேர்த்தியான காதல் என்ற கருத்து தழைத்தோங்கிக் கொண்டிருந்த உயர் மத்திய காலத்தைச் சேர்ந்த ஜெஃப்ரி சாஸர் வட்டத்தில் உருவாகியிருந்த ரொமாண்டிக் காதல் என்ற விஷயத்தோடு தொடர்புகொண்டிருந்தது. "வாலண்டைன்கள்" வடிவத்தில் காதல் குறிப்புகளை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்ளுவதோடும் இந்த நாள் நெருக்கமாக சம்பந்தப்பட்டிருந்தது. இதய வடிவலான உருவம், புறாக்கள் மற்றும் சிறகுகளுள்ள தேவதையின் உருவம் ஆகியவை நவீன காலத்திய காதலர் தின குறியீடுகளில் அடங்கும்.
பத்தொன்பதாம் நூற்றாண்டு முதல், கையால் எழுதப்படும் குறிப்புகள், பெருமளவில் தயாரிக்கப்பட்ட வாழ்த்து அட்டைகளுக்கு வழிவிட்டிருக்கிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டு இங்கிலாந்தில் வாலண்டைன்களை அனுப்புவது ஒரு நாகரீகமாக இருந்தது, 1847 ஆம் ஆண்டில் எஸ்தர் ஹாவ்லண்ட் தன்னுடைய வெர்ஸ்டர், மசாசூஸெட்ஸ் வீட்டில் ஆங்கிலேய உருமாதிரிகளை அடிப்படையாகக் கொண்டு வாலண்டைன் அட்டைகளை கையால் செய்யும் தொழிலை வெற்றிகரமாக உருவாக்கினார்.
பத்தொன்பதாம் நூற்றாண்டு அமெரிக்காவில், தற்போது காதலை வெளிப்படுத்துவதைக் காட்டிலும் பொதுவான வாழ்த்து அட்டைகளாக உள்ள பல வாலண்டைன் அட்டைகளும் பிரபலமாக இருந்தபோது அமெரிக்காவில் விடுமுறை தினங்கள் வணிகமயமாவதற்கான எதிர்கால முன்னறிவிப்பாக இருந்துள்ளது..
கிறிஸ்துமஸ் தினத்திற்கு அடுத்தபடியாக, வாழ்த்து அட்டை அனுப்புவதில் இரண்டாவது இடத்தில் உள்ள கொண்டாட்ட தினமான வாலண்டைன்ஸ் தினத்தில் உலகம் முழுவதிலும் வருடத்திற்கு ஏறத்தாழ ஒரு பில்லியன் வாலண்டைன் அட்டைகள் அனுப்பப்படுவதாக அமெரிக்க வாழ்த்து அட்டை அமைப்பு கணக்கிட்டுள்ளது. இதற்காக அமெரிக்காவில் பெண்களைவிட ஆண்கள் சராசரியாக இரண்டு மடங்கு செலவிடுகிறார்கள் என்று இந்த அமைப்பு கணக்கிட்டுள்ளது.                                                                                  
                                                                                                                                                 இந்தியா போன்ற நாடுகளில் குடும்பம் குடும்பமாக வாழ்வது, தினமும் பாசத்தை அள்ளி அள்ளி வழங்குவது, குடும்பத்திற்காக ஒருசிலர் தங்கள் வாழ்க்கையையே தியாகம் செய்வது, காதலுக்காக உயிரையும் தர தயாராக இருப்பது போன்ற நிகழ்வுகள் சர்வ சாதாரணம். நமது கலாச்சாரத்தில் ஒவ்வொரு நாளும் அன்பு செலுத்தும் நாளாக இருப்பதாக அன்பு செலுத்துவதற்காக என ஒரு தனி நாள் கொண்டாட்டம் தேவையில்லை
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo