Onetamil News Logo

திரைப்பட நடிகர் பன்முகம் கொண்ட கிரேஸி மோகன் இன்று காலமானார்.

Onetamil News
 

திரைப்பட நடிகர் பன்முகம் கொண்ட கிரேஸி மோகன் இன்று காலமானார்.  


சென்னை 2019 ஜூன் 10 ;முன்னணி நாடகக் கலைஞர், வசனகர்த்தா, திரைப்பட நடிகர் என பன்முகம் கொண்ட கிரேஸி மோகன் இன்று காலமானார்.                                                                                                      நெஞ்சுவலி காரணமாக இன்று சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், சிகிச்சைப் பலனின்றி தன்னுடைய 67-வது வயதில் காலமானார்.                                                                                                         கிரேசி மோகன் 16 அக்டோபர் 1949 அன்று பிறந்தார்.  2019 ஜூன் 10 ம் தேதி இன்று மறைந்தார்.. இவர் தமிழ்த் திரையுலகில் கதை-வசன கர்த்தாவாகவும், நடிகராகவும் பணியாற்றியவர். இது தவிர நாடக ஆசிரியராகவும் பணியாற்றியவர். பல மேடை நாடகங்களை இயக்கி நடித்தார்..                         அடிப்படையில் பொறியாளரான இவர் நடிகர் கமல்ஹாசன் மூலம் திரையுலகில் அறிமுகம் ஆனார். அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்திற்கு வசனம் எழுதியதைத் தொடர்ந்து மைக்கேல் மதன காமராஜன், பஞ்ச தந்திரம், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு கதை-வசன கர்த்தாவாக பணியாற்றினார். முழுக்கவே நகைச்சுவையாக எழுதுவதில் பெயர் பெற்றவர். நடிகரும் வசனகர்த்தாவுமான கிரேஸி மோகன் நெஞ்சு வலி காரணமாக இன்று காலமானார்.
’கிரேஸி தீவ்ஸ் இன் பாலவாக்கம்’ என்னும் நாடகம் மூலம் பிரபலமானவர் கிரேஸி மோகன். தொடர்ந்து பல மேடை நாடகங்கள், டிவி நிகழ்ச்சிகள், தொடர்கள், சினிமா என இயங்கி வந்தவர் மோகன். தன்னுடைய சகோதரர் பாலாஜி உடன் இணைந்து இவர் இயற்றிய பல நாடகங்களுக்கு இன்றளவும் மக்கள் போட்டிப்போட்டு வரவேற்பு அளிப்பர்.
1970-ம் ஆண்டு கிண்டி பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்பை நிறைவு செய்தவர் 1979-ம் ஆண்டு முதல் தனது நண்பர்கள் உடன் இணைந்து ‘கிரேஸி’ என்னும் குழு மூலம் மேடை நாடகங்களை இயக்கி, நடிக்கவும் தொடங்கினார். நடிகர் கமல்ஹாசன் உடன் இணைந்து பல வெள்ளித்திரை படங்களுக்கும் கதை, வசனம் எழுத்தியுள்ளார் கிரேஸி மோகன்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo