பி.வி.சிந்து உலக பேட்மின்டன் சாம்பியன் பட்டத்தை வென்றார்
சீனா 2019 ஆகஸ்ட் 25 ;இந்தியர் ஒருவர் உலக பேட்மின்டன் சாம்பியன் பட்டத்தை வெல்வது இதுவே முதல் முறை
‘வேர்ல்டு டூர் பைனல்ஸ்’ பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவு ஃபைனலில் இந்தியாவின் பிவி சிந்து வெற்றி பெற்றார். இதன் மூலம் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் சிந்து.
உலக பேட்மிண்டன் இறுதிச்சுற்று தொடர் சீனாவில் உள்ள குவாங்ஸோ நகரில் நடைபெற்றது. இதில் பேட்மிண்டன் தரவரிசையில் முதல் எட்டு இடங்களில் உள்ள வீராங்கனைகள் பங்கேற்று விளையாடுவர். நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் அரை இறுதியில், தர வரிசையில் 6-வது இடத்தில் உள்ள இந்திய வீராங்கனை பி.வி.சிந்துவும், 8-ம் இடத்தில் உள்ள தாய்லாந்தைச்சேர்ந்த வீராங்கனை ராட்சனோக் இன்டானோடுடன் மோதினார். இதில் 21-16, 25-23 என்ற கணக்கில் இன்டோனாவை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இதையடுத்து ஃபைனலில் பிவி சிந்து, ஜப்பானின் ஒகுரா நோசோமியை எதிர்க்கொண்டார்.
முன்னாள் உலக சாம்பியனான இவருடன் சிந்து 12 முறை மோதியுள்ளார். இருவரும் 6 முறை வெற்றி என்ற சராசரி கணக்குடன் களமிறங்கியதால் போட்டியில் விறுவிறுப்புக்கூடியது. இதில் துவக்கம் முதல் அசத்திய சிந்து முதல் செட்டை 21-19 என வென்றார். தொடர்ந்து நடந்த இரண்டாவது செட்டிலும் அசத்திய சிந்து, 21–17 என தன்வசப்படுத்தினார். முடிவில், இந்தியாவின் பிவி சிந்து, ஜப்பானின் ஒகுரா நோசோமியை 21-9, 21-17 என்ற செட்களில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வெற்றார்.