Onetamil News Logo

இந்திய மீனவர்கள் நலனுக்கென தனி அமைச்சகம் சமம் குடிமக்கள் இயக்கம் கோரிக்கை   

Onetamil News
 

இந்திய மீனவர்கள் நலனுக்கென தனி அமைச்சகம் சமம் குடிமக்கள் இயக்கம் கோரிக்கை   


மதுரை  2021 ஜனவரி 25 ;இந்திய மீனவர்கள் நலனுக்கென தனி அமைச்சகம் சமம் குடிமக்கள் இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
சமம் குடிமக்கள் இயக்கம்,மாநிலத்தலைவர் வழக்கறிஞர். சிசே.இராசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது....
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் விசைப்படகு துறைமுகத்தில்  இருந்து கடந்த ஜனவரி 18-ந்தேதி 214 விசைப்படகுகள் கடலுக்கு முன்பிடிக்க சென்றுள்ளன. இதில் ராமேஸ்வரம் தங்கச்சி மடத்தை சேர்ந்த ஆரேக்கிய சேசு என்பவரது விசைப்படகில் ராமேஸ்வரம் தங்கச்சி மடத்தை சேர்ந்த மெர்சியா (30),உச்சபுளியை சேர்ந்த  நாகராஜ் (52), மண்டபத்தை சேர்ந்த சாம்சன் (28), உச்சுப்புளியை சேர்ந்த செந்தில்குமார் (32) ஆகிய 4 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். இவர்களது படகுகளின் மீது இலங்கை கடற்படையினர் தங்களது கப்பலைக் கொண்டு மோதி மீனவர்களையும் அவர்களது படகையும் மூழ்கடித்துள்ளனர். மீனவர்களை சித்திரவதை செய்து கொலை செய்துள்ளனர்.
மீனவர்களின் உடலானது தேடி கண்டுபிடிக்கப்பட்டு  தமிழகம் கொண்டு வர அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டன. அதன் அடிப்படையில் 23ஆம்தேதி  காலை இலங்கை கடற்படையினர் 4 மீனவர்களின் உடல்களையும் கடல் மார்க்கமாக  இந்திய எல்லையில் இந்திய கடலோர காவல் படையினரிடம் ஒப்படைத்தனர். பின்னர் மீனவர்களின் உடலானது  கோட்டைப்பட்டினம் துறைமுகம் கொண்டு வரப்பட்டு அதன் பின்னர் ஆம்புலன்ஸ்களில் எடுத்துச் செல்லப்பட்டு ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. உடலை பெற்றுக் கொண்ட ராமநாதபுரம் மாவட்ட அதிகாரிகள் மீனவர்களின் உடலை அவர்களின் சொந்த ஊருக்கு சென்று உறவினர்களிடம் ஒப்படைத்துள்னர்.
படகில் இருந்த 4 மீனவர்களும் வயர்லெஸ் கருவியில், ''16வது சேனலில் எங்கள் படகு மீது இலங்கை நேவி கப்பல் மோதுகிறது. உயிருக்கு ஆபத்து எங்களை காப்பற்றுங்கள்'' என தொடர்ந்து குரல் எழுப்பினர். உதவி கிடைக்காத நிலையில் கடலில் தத்தளித்த 4 மீனவர்களையும் மீட்ட இலங்கை வீரர்கள் கயிற்றில் கட்டி இரும்பு தடியால் கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ளனர். 
இச் சம்பவத்தின் மூலம்  இனவெறி பிடித்த சிங்கள கடற்படையினர் தங்கள்  கப்பலைக் கொண்டு மீனவர்களின்  படகின் மீது மோதி  படகை மூழ்கடித்து உள்ளனர் என்பதை அறிய முடிகிறது. கடலில் தத்தளித்த மீனவர்கள் வாக்கி டாக்கி மூலம் மற்ற மீனவர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில்தான்  கடலில் தத்தளித்த மீனவர்களை இலங்கை கடற்படையினர் சித்ரவதை செய்து கொலை செய்துள்ளனர் என்கின்றனர் நம் மீனவர்கள் . பலத்த காயத்துடன்தான்  மீனவர்களின் சடலங்கள் கிடைத்துள்ளன. உடல்கூறாய்வு தமிழகத்திலும் நடத்தப்பட வேண்டும் என்ற மீனவர்களின் கோரிக்கைக்கு அரசு அழுத்தம் கொடுக்கவில்லை என்பதை பார்க்க முடிகிறது..  இந்திய இலங்கை அரசுகளின் மெத்தன போக்கால் தான் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுகின்றன. இந்த படுகொலையை சமம் குடிமக்கள் இயக்கம்  வன்மையாக கண்டிக்கிறது. 
தொலை நோக்கு கண்ணோட்டத்தில் கச்சத்தீவு பகுதி பாக்நீரிணையின் மீன்பிடி சிக்கலுக்கு நிரந்தர தீர்வு காண்பதற்கு இந்திய இலங்கை அரசுகள் முன்வராமல் மீனவர்களை  பலிகடாக்களாக மாற்றி வரும் போக்கு மிகவும் மோசமான அரசியல் ஆகும். இந்த அரசியலில் தான் மத்திய மாநில அரசுகள் குளிர் காய்ந்து கொண்டிருக்கின்றன. இலங்கை அரசை நிர்பந்திக்கும் அளவில் இந்திய அரசு இல்லையா? இல்வை தமிழக மீனவர்கள் என்பதால்தான் இந்த பாரபட்சமா?என்கிற கேள்வியும் நமக்கு எழும்புகிறது. 
மீனவர்கள் கடலில் பாதுகாப்பாக மீன்பிடிப்பதை இருநாட்டு அரசுகளும் உறுதி செய்ய வேண்டும். சர்வதேச மீன்பிடி உரிமையானது  பாதுகாக்கப்பட வேண்டும்.
மத்திய அரசு வேடிக்கைப் பார்க்காமல் இலங்கை அரசிற்கு கடுமையான கண்டனத்தை தெரிவிக்க வேண்டிய நேரம் இது.. இனியும் இதுபோன்ற சம்பவங்கள் நடைப்பெறாமல் இருக்க இந்திய அரசு இலங்கை அரசிடம் இருந்து எழுத்துப்பூர்வ உத்தரவாதம் பெற வேண்டும். இலங்கை கடற்படையினரின் கொலை குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். சர்வதேச நீதிமன்றத்திற்கு இவ்வழக்கு கொண்டு செல்லப்பட வேண்டும்..
கொல்லப்பட்ட மீனவர்களுக்கு பொறுப்பேற்று மத்திய அரசூம், இலங்கை அரசும் இழப்பீடு கொடுக்க வேண்டும். தமிழக மீனவர்களின் உயிருக்கும், மீன்பிடித்தொழிலுக்கும் நிரந்தர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். இந்திய மீனவர்கள் நலனுக்கென்று தனி அமைச்சகத்தை உடனடியாக ஏற்படுத்திட வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo