Onetamil News Logo

தூத்துக்குடி மேலமருதூரில் உள்ள கோஸ்டல் எனர்ஜென் நிறுவனம் மற்றும் அதன் சார்பு    சீபோல் நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

 
Onetamil News
Onetamil News
 
 

தூத்துக்குடி மேலமருதூரில் உள்ள கோஸ்டல் எனர்ஜென் நிறுவனம் மற்றும் அதன் சார்பு    சீபோல் நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.


                                                                                                                                                                தூத்துக்குடி ஜனவரி 4 ;  தூத்துக்குடியில் கோஸ்டல் மின் உற்பத்தி நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  
இந்தியா முழுவதும் வருமான வரி ஏய்ப்பு தொடர்பாக புகார்கள் வந்ததை அடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு உள்ளனர். சென்னை மும்பை பெங்களுரு டெல்லி உள்பட பல்வேறு நகரங்களில் சோதனையானது நடைபெற்று வருகிறது. இந்த அதிரடி சோதனைகளில் கோடிக்கணக்கில் பணம் மற்றும் கணக்கில் காட்டப்படாத சொத்துக்களும் வெளிவரும் எனத்தெரிகிறது. தனியார் மின் உற்பத்தி நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் தற்போது தீவிர சோதனை நடைபெற்று வருகிறது.  குறிப்பாக கோஸ்டல் எனர்ஜென் நிறுவனம் மற்றும் அதன் சார்பு நிறுவனங்களில் வருமான வரித்துறையை சார்ந்த   வடமாவட்டத்தை சேர்ந்த 25பேர் கொண்ட வருமானவரித்துறை அதிகாரிகள் இன்று சோதனையில் ஈடுப்பட்டுள்ளனர். நிலக்கரி இறக்குமதியில் நடைபெற்றுள்ள முறைகேடு  மற்றும் வரி ஏய்ப்பு தொடர்பாக சோதனைகள் நடைபெற்று வருவதாக வருமானவரித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நாடு முழுவது அந்த குழுமத்திற்கு சொந்தமான 7 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி மேலமருதூரில் உள்ள கோஸ்டல் எனர்ஜென் நிறுவனம் மற்றும் அதன் கிளை நிறுவனமாக சீபோல் என்ற இறக்குமதி ஏற்றுமதி நிறுவனத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.          
கருப்பு பணத்தை ஒழிக்கவும், கள்ள நோட்டுகளை கட்டுப்படுத்தவும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நடவடிக்கைகளின் உச்சமாக 500, 1000 ரூபாய் நோட்டுகளுக்கு நவம்பர் மாதம் 8-ந்தேதி திடீரென தடை விதிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து இந்தியா முழுவதும் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை வெளியில் கொண்டு வரும் நடவடிக்கைகளை வருமான வரிதுறையினர் முடுக்கி விட்டனர்.
தொழில் அதிபர்கள், பெரும்பணக்காரர்கள் ஆகியோர் தங்களது வீடு மற்றும் நிறுவனங்களில் கோடிக்கணக்கான ரூபாயை பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் வருமான வரித்துறை அதிகாரிகள் கண்கொத்தி பாம்பாக கண்காணித்து வருகிறார்கள்.அதுபோன்று பதுக்கி வைக்கப்பட்டுள்ள பணத்தை பறிமுதல் செய்ய தொடர்ச்சியாக சோதனைகளும் நடத்தப்பட்டு வருகின்றன.
சென்னையை சேர்ந்த தொழில் அதிபர் சேகர் ரெட்டி தனது வீடு மற்றும் அலுவலகங்களில் கட்டுகட்டாக ரூபாய் நோட்டுகளை பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், கடந்த 8-ந்தேதி வருமான வரி துறையினர் சோதனை நடத்தினர். சென்னை மற்றும் வேலூரில் உள்ள அவரது வீடு, தி.நகரில் உள்ள அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.131 கோடி பணமும், 170 கிலோ தங்க நகைகளும் சிக்கின. இதில் 34 கோடி ரூபாய் புதிய ரூபாய் நோட்டுகளாக இருந்தன. இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து சேகர் ரெட்டியும் அவரது கூட்டாளிகள் 4 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.இதன் தொடர்ச்சியாக தமிழக தலைமை செயலாளர் ராமமோகனராவ் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அவரது மகன் விவேக் மற்றும் உறவினர்கள் வீடுகளிலும் சோதனை நடந்தது. வருமானவரி சோதனைக்கு ராமமோகனராவ் கடும் எதிர்ப்பு தெரிவித்து கூறிய கருத்துக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. மத்திய அரசை ராமமோகன ராவ் விமர்சித்தது சர்ச்சைகளையும் உருவாக்கியது. வருமான வரித்துறை அதிகாரிகளையும் ராமமோகன ராவ் கடுமையாக சாடினார்.
இதனால் வருமான வரித்துறை அதிகாரிகளின் வேகம் மேலும் சூடு பிடிக்கும் என்றும் ராமமோகனராவ் மீதான பிடி இறுகும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வருமான வரித்துறையினரோ, அதன் பின்னர் எந்தவித சோதனையிலும் ஈடுபடாமல் கடந்த சில நாட்களாக அமைதி காத்து வந்தனர்.இந்நிலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று மீண்டும் சோதனையை தொடங்கினர். நாடு முழுவதும் 70 இடங்களில் ஒரே நேரத்தில் இந்த சோதனை நடந்தது.
டெல்லி, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட இடங்களில் தொழில் அதிபர்களின் வீடுகளை குறிவைத்து இந்த சோதனை நடத்தப்பட்டது.
கட்டுமான தொழிலில் ஈடுபட்டு வரும் பிரபல நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிறுவனத்தின் உரிமையாளருக்கு சொந்தமான ராயப்பேட்டையில் பிரமாண்டமான வணிக வளாகம் ஒன்றும் செயல்பட்டு வருகிறது. அங்கும் சோதனை நடத்தப்பட்டது. சென்னை சாலி கிராமத்தில் உள்ள ஹைபவர் என்கிற நிறுவனத்திலும் சோதனை நடத்தப்பட்டது.
அண்ணா நகர், பெரியமேடு உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடந்தது. தூத்துக்குடி, மதுரை, கீழக்கரை ஆகிய இடங்களிலும் தொழில் அதிபர் ஒருவரது வீடு மற்றும் கல்வி நிறுவனங்களிலும் சோதனை நடந்தது. மொத்தம் 17 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி வேட்டையில் ஈடுபட்டனர். இந்த நிறுவனங்கள் அனைத்தும் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக கிடைத்த புகாரின் அடிப்படையிலேயே இந்த சோதனை நடத்தப்பட்டது.   
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo