Onetamil News Logo

தூத்துக்குடி மாவட்டத்தில் மின்னனு குடும்ப அட்டைகளில் குடும்ப தலைவரின் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை வரும் 14 ம் தேதி ஒப்படைக்க கலெக்டர் உத்தரவு 

Onetamil News
 

தூத்துக்குடி மாவட்டத்தில் மின்னனு குடும்ப அட்டைகளில் குடும்ப தலைவரின் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை வரும் 14 ம் தேதி ஒப்படைக்க கலெக்டர் உத்தரவு 



தூத்துக்குடி அக்டோபர் 12 ; தூத்துக்குடி மாவட்டத்தில் மின்னனு குடும்ப அட்டைகளில் குடும்ப தலைவரின் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை வரும் 14 ம் தேதி ஒப்படைக்க கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.  தூத்துக்குடி மாவட்டத்தில், பொதுவிநியோகத்திட்டத்தின் கீழ் நுகர்வோர்களுக்கு 01.04.2017 முதல் மின்னனு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது.  இதில் புகைப்படம் இல்லாததால் சிலருக்கு மின்னனு குடும்ப அட்டை அச்சடிக்க இயலாமல் உள்ளது 
புகைப்படம் பதிவேற்றம் செய்யப்பட வேண்டிய குடும்ப அட்டைதாரர்களின்  பட்டியல் அந்தந்த பகுதி நியாயவிலைக் கடைகளில் ஒட்டி விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.  மேற்கண்ட பட்டியலில் கண்ட குடும்ப அட்டைதாரர்கள் தங்களது குடும்ப தலைவரின் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை அந்தந்த நியாயவிலைக்கடைகளில் 14.10.2017 சனிக்கிழமையன்று நடைபெறும் சிறப்பு முகாம்களில் தவறாது ஒப்படைக்க வேண்டும்.  புகைப்படம் கொடுத்த பின்பு  உடன் பதிவேற்றம் செய்யப்பட்டு மின்னனு குடும்ப அட்டை உடன் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்  தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo