Onetamil News Logo

மாப்பிள்ளையூரணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூட்டம்   

Onetamil News
 

மாப்பிள்ளையூரணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூட்டம்       


தூத்துக்குடி 2023 மார்ச் 16; மாப்பிள்ளையூரணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாப்பிள்ளையூரணியில் தாளமுத்துநகர், துப்தாஸ்தட்டி ஆகிய கிளைகளின் கூட்டுக்கூட்டம் அழகுவேல் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் நூற்றாண்டு மலரை கணபதி சுப்பிரமணியன் அறிமுகப்படுத்தி பேசினார். மாநிலக்குழு உறுப்பினர் ஞானசேகர், மாணிக்கம் நூற்றாண்டு மலரை வெளியிட கிளைச்செயலாளர் அந்தோணி சௌந்தர்ராஜன் மற்றும் அழகுவேல் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். 2023ம் ஆண்டுக்கான  கட்சி உறுப்பினர் அட்டையை கிளை உறுப்பினர்கள் பெற்றுக்கொண்டு உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள்.
கூட்டத்தில் தூத்துக்குடி மாநகராட்சி துவங்கப்பட்ட காலத்தில் மாப்பிள்ளையூரணி ஊராட்சி மாநகரில் இணைப்பட்டிருந்தது. பின்பு என்ன காரணம் என்று அறிவிக்காமலேயே மாநகராட்சியில் இணைக்கப்படவில்லை என்று அறிவித்தன. தொலைவில் உள்ள பகுதியில் மாகராட்சியுடன் இணைக்கப்பட்டும் மாநகராட்சி  ஓட்டிய பகுதியான மாப்பிள்ளையூரணி ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைக்காததும் அந்த பகுதி மக்களை அரசு வஞ்சிப்பதாக உள்ளது. மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்குட்பட்ட தாளமுத்துநகர் சுற்றியுள்ள பகுதிகளில் உப்பளம் கட்டுமானம் மீன்பிடி தொழிலாளர்கள் அடர்த்தியாக குடியிருந்து வருகின்றனர். அவர்கள் குடிநீருக்காக தினமும் அல்லல்படுகிறார்கள். மேலும் தாம் பெறும் அன்றாடக் கூலியில் கனிசாமான அளவு செலவு செய்ய வேண்டியுள்ளது. எனவே மாப்பிள்ளையூரணி ஊராட்சியை தூத்துக்குடி மாநகராட்சியுடன் இணைத்து 4வது பைப் லைன் திட்டத்தை மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதிகளுக்கு விரிவுப்படுத்த வேண்டும்.
தாளமுத்துநகர் பகுதி மக்கள் அடர்த்தியாக குடியிருக்கும் பகுதியாகும் ஆதலால் வணிகர்களும் அதிகமாக உள்ள பகுதியாகும் பொதுமக்களும் வணிகர்களும் வங்கி சேவை பெற வேண்டுமானால் 3 கிலோமீட்டர் தொலைவுக்கும் அதிகமாக செல்ல வேண்டியுள்ளது. எனவே தாளமுத்துநகர் பகுதியில் அரசுடமை வங்கி கிளை துவங்க மாவட்ட நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  
தூத்துக்குடி பழைய மற்றும் புதிய பேருந்து நிலையங்களிலிருந்து அதிகப்படியான மின பேருந்துகள் தாளமுத்துநகர் பகுதிக்கு இயக்கப்படுகிறது. அந்த பேருந்துகள் தாளமுத்துநகர் சாலையில் ஓரே நேரத்தில் பல பேருந்துகள் நிற்பதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. எனவே தாளமுத்துநகர் பகுதியில் மின்பேருந்துகள் நின்று பயணிகள் ஏற்று செல்வதற்காய் துணை பேருந்து நிலையம் அமைக்க வேண்டும்.
தாளமுத்துநகர் பகுதி பொதுமக்களும் மாணவ மாணவியரும் பயன்பெறும் வகையில் பொது நூலகம் அமைக்க கோரிக்கையும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo