Onetamil News Logo

தூத்துக்குடி-திருநெல்வேலி மதுரை செல்லும் வழித்தடத்தில் பேருந்துகள் நிறுத்தம் செய்யும் உணவகங்களில் எம்ஆர்பி நிர்ணயம் செய்யப்பட்ட விலைக்கு அதிகமான விலைக்கு உணவு பொருள்களை விற்பனை செய்தால் புகார் தெரிவிக்கலாம் 94 875 99 132 ;944 5400 495 

Onetamil News
 

தூத்துக்குடி-திருநெல்வேலி மதுரை செல்லும் வழித்தடத்தில் பேருந்துகள் நிறுத்தம் செய்யும் உணவகங்களில் எம்ஆர்பி நிர்ணயம் செய்யப்பட்ட விலைக்கு அதிகமான விலைக்கு உணவு பொருள்களை விற்பனை செய்தால் புகார் தெரிவிக்கலாம் 94 875 99 132 ;944 5400 495   


தூத்துக்குடி 2020 நவம்பர் 19 ;தூத்துக்குடியிலிருந்து மதுரைக்கு பயணிக்கும்போது மேலக்கரந்தை அருகிலுள்ள தனியார் சாலையோர உணவகத்தில் பேருந்து நிறுத்தபட்டது. அங்கிருந்த கடையில் பிஸ்கட் வாங்கியபோது ரூபாய் 10க்கு விற்கப்படும் பிஸ்கட் ரூபாய் 15க்கு  கூடுதல் விலைக்கு விற்கப்பட்டதால் இதற்கு ஏன் அதிக விலைக்கு விற்கிறீர்கள் என்ற கேட்டதற்கு உணவக உரிமையாளர் அப்படித்தான் விற்பனை செய்வோம் என்றனர்.அவர்கள் வாடிக்கையாளர்களை தகாத வார்த்தையில் பேசியதால் பேருந்து நடத்துனர் /ஓட்டுனர் ஆகியோரிடம் புகார் செய்தபோது ஓட்டுனர் மற்றும் நடத்துனர் இருவரும் அவர்கள் கூறியதாவது...விலை அதிகமாக இருந்தால் பொருட்களை வாங்காதீர்கள் என்று உணவக உரிமையாளகளுக்கு ஆதரவாக பேசினார்கள். இந்த நிலையில் அரசு விரைவு பேருந்து கழக அலுவலகத்திற்கு புகார் தெரிவித்து பிரையண்ட் நகர் அமீர் ஜான்  என்பவர் ஓட்டுனர் நடத்துனர் மீது தக்க நடவடிக்கை எடுக்க கூறி புகார் கடிதம் எழுதினார்.      
                        அப்பொழுது அவருக்கு வந்த பதில் கடிதம் ;  உணவு உரிமையாளர் மற்றும் நெடுந்தூர பேருந்துகளில் பயணம் செய்யும்போது மக்கள் மற்றும் சிறு குழந்தைகளின் தங்கள் இயற்கை உபாதையை களிப்பதற்கும் நெடுந்தூர பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர் நடத்துனர்களுக்கு புத்துணர்ச்சி ஏற்படுத்துவதற்கா கவும் அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம் பேருந்துகளை உணவகத்திற்கு சென்று வர ஒப்பந்தம் செய்யப்பட்டு அனைத்து பேருந்துகளும் எடுத்துச் செல்லப்படுகிறது மேலும் மேற்படி புகார் மீது அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம் ஆய்வு செய்யப்பட்டு உணவக உரிமையாளர் அறிவுறுத்தி இனி வரும் காலங்களில் பொது மக்களிடமிருந்து புகார் எல்லா வண்ணம் நடந்து கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.மேலும் இதுகுறித்து அகில இந்திய மனிதவளப்பேரவை மாவட்டத்தலைவர் மதுரை உயர்நீதிமன்ற வக்கீல் ஜெயச்சந்திரன் கூறியதாவது... தமிழகம் முழுவதும் மோட்டல்களில் இதே நிலைமைதான் ஏற்பட்டு வருகிறது.ஆகையால் இதுகுறித்து மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்றார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo