Onetamil News Logo

கொரோனா பாதித்த குழந்தைக்கு வாயோடு வாய் வைத்து செயற்கை சுவாசம் அளித்த செவிலியருக்கு பாராட்டு

Onetamil News
 

கொரோனா பாதித்த குழந்தைக்கு வாயோடு வாய் வைத்து செயற்கை சுவாசம் அளித்த செவிலியருக்கு பாராட்டு


திருவனந்தபுரம் 2021 செப் 3: கேரளாவின் திருச்சூர் மாவட்டம் புதுக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீஜா. இவர் நன்மணிக்கரா பஞ்சாயத்து பகுதியில் உள்ள குடும்பநல மையத்தில் செவிலியராக உள்ளார். சம்பவத்தன்று நர்ஸ் ஸ்ரீஜா விடுமுறையில் வீட்டில் இருந்தார். இளம்பெண் ஒருவர் மயங்கிய நிலையில் இருந்த 3 வயது குழந்தையை அவர் வீட்டுக்கு தூக்கி வந்தார். அந்த குழந்தை இறந்து விட்டதாக அனைவரும் கருதினர்.
குழந்தையை கையில் வாங்கிய ஸ்ரீஜா, கோவிட் தொற்று பாதிப்பால் தொடர் வாந்தி மற்றும் மூச்சு திணறல் ஏற்பட்டு, குழந்தை மயங்கிய நிலையில் இருப்பதை புரிந்து கொண்டார். செயற்கை சுவாசம் அளிக்காவிட்டால் அதன் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் உடனடியாக குழந்தையின் வாயோடு வாய் வைத்து செயற்கை சுவாசம் அளித்து முதல் உதவி செய்தார். இப்படி பலமுறை செய்ததால், குழந்தையின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. மெதுவாக கண்களை திறந்து பார்த்தது. அதன்பின், குழந்தையை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.இதுகுறித்து, டாக்டர்கள் கூறுகையில், 'சரியான நேரத்தில் செயற்கை சுவாசம் அளித்ததால் குழந்தையின் உயிரை காப்பாற்றப்பட்டு உள்ளது' என்றனர்.
செவிலியர் ஸ்ரீஜா கூறுகையில், 'குழந்தை மயங்கிய நிலையில் இருந்த போதே அதன் நிலையை புரிந்து கொண்டேன். கொஞ்சம் தாமதம் செய்தாலும் உயிருக்கு ஆபத்து ஏற்படும். எனவே, எனக்கு கோவிட் தொற்று ஏற்பட்டாலும் பரவாயில்லை எனக் கருதி முதல் உதவி சிகிச்சையாக செயற்கை சுவாசம் அளித்தேன். அது மிகவும் பயனளித்தது. குழந்தையின் உயிர்தான் முக்கியம்' என்றார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo