Onetamil News Logo

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் தா.பாண்டியன் இன்று காலை காலமானார். அவரது உடல் உசிலம்பட்டி அருகே நாளை நல்லடக்கம் 

Onetamil News
 

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் தா.பாண்டியன் இன்று காலை காலமானார். அவரது உடல் உசிலம்பட்டி அருகே நாளை நல்லடக்கம் 


சென்னை 2021 பிப்ரவரி 26 ; இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் தா.பாண்டியன் (89) இன்று காலை 9.58 மணிக்கு சென்னை ராஜீவ் காந்தி அரசினர் பொது மருத்துவமனையில் காலமானார். 
           தா. பாண்டியன் மறைவு குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பு ;  
            இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் தா.பாண்டியன் (89) இன்று காலை 9.58 மணிக்கு சென்னை ராஜீவ் காந்தி அரசினர் பொது மருத்துவமனையில் காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் அறிவிக்கிறோம்.அவரது உடல் அண்ணா நகர், டிவிஎஸ் காலனியில் உள்ள அவரது இல்லத்தில் உறவினர்கள் மரியாதை செலுத்த வைக்கப்படுகிறது.பிறகு, இன்று மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை தியாகராயர் நகர், 43, செவாலியே சிவாஜி கணேசன் சாலையில் உள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில அலுவலகமான பாலன் இல்லத்தில் பொதுமக்கள் மரியாதை செலுத்த வைக்கப்பட உள்ளது.
             நாளை (27.02.2021) காலை முதல் மதியம் 2 மணிவரை மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகில் உள்ள கீழ் வெள்ளை மலைப்பட்டியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. பிறகு, டேவிட் பண்ணை தோட்டத்தில் 2 மணிக்கு நல்லடக்கம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo