Onetamil News Logo

தோழர் தா பாண்டியன் உடல்நிலை தீவிர சிகிச்சை தொடர்கிறது ;இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தகவல்

Onetamil News
 

தோழர் தா பாண்டியன் உடல்நிலை தீவிர சிகிச்சை தொடர்கிறது ;இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தகவல்


சென்னை 2021 பிப்ரவரி 25 ;இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களுக்கு விடுத்துள்ள செய்தி அறிக்கை ; தோழர் தா பாண்டியன் உடல்நிலை தீவிர சிகிச்சை தொடர்கிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் தா பாண்டியன் நேற்று 24ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நோய்த்தொற்று மற்றும் இரத்த அழுத்தம் காரணமாக ஏற்பட்ட பாதிப்புக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிறப்பு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வரும் நிலையிலும் தோழர் தா.பாண்டியன் உடல் நிலையில் மாற்றம் காணாத நிலை நீடிக்கிறது. செய்தியறிந்த கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் தோழர் டி ராஜா. சட்டமன்ற உறுப்பினர்கள் தமிமுன் அன்சாரி. கருணாஸ். தனியரசு மற்றும் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் மருத்துவமனைக்கு நேரில் வந்து அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்கள் மற்றும் தோழர் தா.பா குடும்பத்தாரிடம் விசாரித்து சென்றிருக்கிறார்கள். இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo