Onetamil News Logo

ராஜீவ்காந்தி படுகொலைக்கு நீதி கேட்டு காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் மரத்தில் தலைகீழாக தொங்கி நூதனப் போராட்டம்

Onetamil News
 

ராஜீவ்காந்தி படுகொலைக்கு நீதி கேட்டு காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் மரத்தில் தலைகீழாக தொங்கி நூதனப் போராட்டம்


மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேருக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், நீதிமன்றம் அளித்த தண்டனையை நிறைவேற்ற பிரதமர் தலைமையில் மத்திய அமைச்சரவை கூடி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் , உணர்வு என்ற அடிப்படையில் ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டை தமிழக அரசு மாற்ற வேண்டும், ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டபோது அவருடன் உயிரிழந்த மற்றும் காயமடைந்த தமிழர்களின் குடும்பங்களுக்கு 5 கோடி ரூபாய் உதவித்தொகை மற்றும் அரசு வேலை வழங்க மத்திய , மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கடம்பூர் சார் பதிவாளர் அலுவலகம் அருகே இருக்கும் வேப்பமரத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் வழக்கறிஞர் அய்யலுசாமி என்பவர் மரத்தில் தலைகீழாக தொங்கி நூதன போராட்டத்தில் ஈடுபட்டார். தனது கோரிக்கையை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினார். சுமார் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக மரத்தில் தலைகீழாக தொங்கியவாறு நூதன போராட்டத்தில் ஈடுபட்டார். இதில் கயத்தாறு ஒன்றிய முன்னாள் தலைவர் செல்லத்துரை,  காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ராமதாஸ், சுப்பாராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo