45 ஆண்டுகளில் இல்லாத வேலையில்லாத திண்டாட்டம், கருத்து சுதந்திரம் பறிப்பு உள்ளிட்ட பாஜகவின் மக்கள் விரோத போக்கை கண்டித்து,தூத்துக்குடியில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, தவறான பொருளாதார கொள்கை, தவறான பண மதிப்பு இழப்பு நடவடிக்கை, பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு வரலாறு கானாத விலை உயர்வு, தவறான ஜிஎஸ்டி அமலாக்கம், 45 ஆண்டுகளில் இல்லாத வேலையில்லாத திண்டாட்டம், கருத்து சுதந்திரம் பறிப்பு உள்ளிட்ட பாஜகவின் மக்கள் விரோத போக்கை கண்டித்து, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறிவித்தபடி, தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், மாவட்ட தலைவர் சி.எஸ்.முரளிதரன் தலைமையில், தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் முன்பு, மத்திய பாஜக அரசிற்கு எதிராக கையில் பதாகைகளை ஏந்தியும், கண்டன முழக்கங்கள் எழுப்பியவாறும் மறியல் போராட்டம் நடைபெற்றது.
இதில் மாநில துணை தலைவர் ஏ.பி.சி.வி.சண்முகம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சுடலையாண்டி, டேனியல்ராஜ், முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் சாமுவேல் ஞானதுரை, ராதாகிருஷ்ணன், கந்தசாமி, மாவட்ட நிர்வாகிகள் பிரபாகரன், மார்க்கஸ், முத்துராஜ், எஸ்.பி. ராஜன், நிர்மல் கிறிடோபர், கோபால், செந்தூர் பாண்டி, தனுஷ், கிருஷ்ணன், கேடிஎம் ராஜா, சின்ன காளை, மைக்கில் பிரபாகர், ராகுல், ராஜ், சுடலை, ராஜ ரத்தினம், தனலெட்சுமி, சாந்தி,
முன்னாள் மாவட்ட தலைவர்கள் சிவசுப்பிரமணியன், ஜெயக்குமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் பிரேம்குமார், உடன்குடி நடராஜன், முத்துமணி, பிரவீன் துரை, எஸ்.எம். சகாயராஜ், ராஜா ராம், குமார முருகேசன், வாசிராஜன், கதிர்வேல், பால சுப்பிரமணியன், மைதீன், முனியசாமி, ஏ.ஜெயக்குமார், அந்தோணி சாமி, ஜெய கிங்ஷ்டன் உட்பட காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.