காவலர் முதல் இன்ஸ்பெக்டர் வரையிலான புகாரை மாவட்ட கலெக்டரிடம் அளிக்க வேண்டும் உள்துறைச் செயலர் அறிவிப்பு
காவலர் முதல் இன்ஸ்பெக்டர் வரையிலான நபர்கள் மீதான புகாரை கலெக்டர்களிடம் அளிக்க வேண்டும் என மாநில காவல்துறை புகார் ஆணையம் அறிவித்துள்ளது. மாநில காவல்துறை புகார் ஆணைய கூட்டம் கடந்த மாதம் 23ஆம் தேதி நடந்தது. இந்த கூட்டத்தில் காவலர்கள், தலைமை காவலர்கள், எஸ்ஐக்கல், இன்ஸ்பெக்டர்கள் ஆகியோருக்கு எதிராக புகார் அளிப்போர் சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டரிடம் புகார் அளிக்க வேண்டும். டிஎஸ்பி மற்றும் அதற்கு மேல் உள்ள அதிகாரிகள் மீது புகார் அளிக்க விரும்புவோர் உள்துறைச் செயலர் தலைமையில் செயல்படும் மாநில காவல்துறை புகார் ஆணையத்திடம் புகார் அளிக்க வேண்டும். அந்த மனுக்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உள்துறை கூடுதல் தலைமைச் செயலர் பநீந்தரரெட்டி தெரிவித்துள்ளார்.
காவலர் முதல் இன்ஸ்பெக்டர் வரையிலான புகாரை மாவட்ட கலெக்டரிடம் அளிக்க வேண்டும் உள்துறைச் செயலர் அறிவித்துள்ளார்.