Onetamil News Logo

நுகர்வோர்களுக்கு வடை போன்ற உணவுப் பொருட்களை அச்சிட்ட நியூஸ் பேப்பரில் பார்சல் செய்யக்கூடாது, தடை செய்யப்பட்ட பான்மசாலா குட்கா மற்றும் மெல்லும் புகையிலையை விற்பனை  சூடான டீ, காபி உள்ளிட்டவற்றை ப்ளாஸ்டிக் பையில் பார்சல் செய்து விற்றால் கடும் நடவடிக்கை என நி

Onetamil News
 

நுகர்வோர்களுக்கு வடை போன்ற உணவுப் பொருட்களை அச்சிட்ட நியூஸ் பேப்பரில் பார்சல் செய்யக்கூடாது,தடை செய்யப்பட்ட பான்மசாலா குட்கா மற்றும் மெல்லும் புகையிலையை விற்பனை  சூடான டீ, காபி உள்ளிட்டவற்றை ப்ளாஸ்டிக் பையில் பார்சல் செய்து விற்றால் கடும் நடவடிக்கை என நியமன அலுவலர் எச்சரிக்கை 


தூத்துக்குடி 2022 மே 13 ;தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிக்குட்பட்ட டீக்கடை உரிமையாளர்களுக்கு உணவு பாதுகாப்பு விழிப்புணர்வுக் கூட்டம் - சூடான டீ, காபி உள்ளிட்டவற்றை ப்ளாஸ்டிக் பையில் பார்சல் செய்து விற்றால் கடும் நடவடிக்கை என நியமன அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 
தூத்துக்குடி மாவட்டம்.உணவு பாதுகாப்புத் துறை, நியமன அலுவலர், டாக்டர்.மாரியப்பன்,வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ;உணவு பாதுகாப்புத் துறையின் ஆணையர் டாக்டர் செந்தில்குமார் மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் செந்தில்ராஜ் ஆகியோர் வழங்கிய அறிவுறுத்தலின் பேரில், மாவட்ட உணவு பாதுகாப்புத் துறையின் நியமன அலுவலர் டாக்டர் மாரியப்பன் தலைமையில், தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட  டீக்கடை உரிமையாளர்களுக்கு உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுக் கூட்டம் தூத்துக்குடியில் நடைபெற்றது. அதில் பேசிய நியமன அலுவலர், செயற்கை கலர் சேர்க்காத, முழு முகவரியுடன் உள்ள டீத்தூள் பாக்கெட்டுகள் மட்டுமே வாங்கிப் பயன்படுத்த வேண்டும், டீ, காபி போன்ற சூடான பானங்களையும் உணவுப் பொருட்களையும் ப்ளாஸ்டிக் பைகளில் பொட்டலமிடக்கூடாது, அயோடின் கலந்த உப்பை மட்டுமே பயன்படுத்த வேண்டும், வடை, பஜ்ஜி போன்றவற்றை ஈக்கள் மொய்க்காதவாறும், தூசிகள் படாதவாறும் கண்ணாடி கூண்டுகளில் வைத்து விற்க வேண்டும், நுகர்வோர்களுக்கு வடை போன்ற உணவுப் பொருட்களை அச்சிட்ட நியூஸ் பேப்பரில் பார்சல் செய்யக்கூடாது, தடை செய்யப்பட்ட பான்மசாலா குட்கா மற்றும் மெல்லும் புகையிலையை விற்பனை செய்யக்கூடாது என்று தெரிவித்ததோடு, மீறுவோர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார். குறிப்பாக, டீ, காபி போன்ற சூடான உணவுப் பொருட்களை அனுமதியற்ற ப்ளாஸ்டிக்கில் பார்சல் செய்தால் அபராதம் விதிப்பு உள்ளிட்ட கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சக்திமுருகன், காளிமுத்து ஆகியோர் கூட்டத்தினை ஏற்பாடு செய்திருந்தனர். கூட்டத்திற்கு தூத்துக்குடி ஹோட்டல்கள் சங்கத் தலைவர் செந்தில் ஆறுமுகம் முன்னிலை வகுத்தார். மேலும், கூட்டத்தில் அறுபதிற்கும் மேற்பட்ட டீக்கடைக்காரர்கள் கலந்துகொண்டனர்.
 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo