எம்.எல்.ஏ-க்களின் பரிந்துரையுடன் ஒப்பந்ததாரர்கள் அமைச்சர்களை பார்க்க வரக்கூடாது,அமைச்சர் பரபரப்பு பேட்டி
கேரளா 2921 அக்டோபர் 16 ;கேரள மாநில முதல்வர் பினராயி விஜயனின் மருமகன் (மகளின் கணவர்) முஹம்மது ரியாஸ் பொதுப்பணித்துறை அமைச்சராக உள்ளார்.
கடந்த 7-ம் தேதி சட்டசபை கூட்டத்தொடரில் பேசிய அமைச்சர் முஹம்மது ரியாஸ், "எம்.எல்.ஏ-க்களின் பரிந்துரையுடன் ஒப்பந்ததாரர்கள் அமைச்சர்களை பார்க்க வரக்கூடாது. அல்லது எம்.எல்.ஏ-க்கள், ஒப்பந்ததாரர்களை அழைத்துக்கொண்டு அமைச்சர்களை சந்திக்க வரக்கூடாது. அப்படி வருவது எதிர்காலத்தில் பல தீங்குகளுக்கு வழிவகுக்கும்" எனக் கூறியிருந்தார். இது ஆளும் சி.பி.எம் கட்சி எம்.எல்.ஏ-க்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.மேலும் சி.பி.எம் கட்சி எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சரான கடகம்பள்ளி சுரேந்திரன் உள்ளிட்ட சில எம்.எல்.ஏ-க்கள் முஹம்மது ரியாஸின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அந்த பேச்சை விமர்ச்சித்தும் பேசியுள்ளனர்.
அமைச்சர் முஹம்மது ரியாஸின் பேச்சு மக்கள் பிரதிநிதிகளான எம்.எல்.ஏ-க்கள் குறித்து மக்கள் மத்தியில் தவறான கண்ணோட்டத்தை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. தொகுதியில் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படுத்தும் விதமாக ஒப்பந்ததாரர்களை சந்திக்க வேண்டிய நிலை எம்.எல்.ஏ-க்களுக்கு ஏற்படும். சில நேரங்களில் அவர்களுடன் அமைச்சர்களை பார்க்க வேண்டிய நிலையும் ஏற்படும். இதை தவறாக சித்திரித்து, சட்டசபை போலுள்ள பொது இடத்தில் அமைச்சர் பேசியிருக்க வேண்டியது இல்லை" என அமைச்சர் முஹம்மது ரியாஸை விமர்ச்சித்திருந்தார்கள் எம்.எல்.ஏ-க்கள்.